அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரிந்தவர்கள் உருப்பட்டதே இல்லை பன்னீர் செல்வத்தின், 'பிடி சாபம்'

Added : மே 03, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 பிரிந்தவர்கள் உருப்பட்டதே இல்லை பன்னீர் செல்வத்தின், 'பிடி சாபம்'

திருப்பரங்குன்றம்:''அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை,'' என, துணை முதல்வர், பன்னீர் செல்வம் பேசினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி, அ.தி.மு.க, வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, சிலைமான் பகுதியில் நேற்று அவர் பேசியதாவது:ஜெயலலிதா ஆட்சி காலத்தில், மக்களுக்காக, தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். அவற்றின் பலன்கள், தற்போது மக்களை சென்றடைந்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கும் சென்றடைய உள்ளது.

அவற்றுடன் சேர்த்து, ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை, முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது.சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக உள்ள ஒரே மாநிலம், தமிழகம் மட்டும் தான். 32 ஆண்டு காலம், ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து, அவரை காப்பாற்ற முடியாத பாவிகள், தற்போது, அ.தி.மு.க., வை அழிக்க வேண்டும் என, தனியாக இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

அ.தி.மு.க., விலிருந்து பிரிந்து, கட்சி தொடங்கிய யாரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., காணாமல் போய்விடும் என ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க., வை தொண்டர்கள், மக்கள் காத்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-மே-201901:46:57 IST Report Abuse
Mani . V இந்த அதர்மயுத்தர் அதிமுக வில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு, பின்னர் பழனிசாமியுடைய அணியுடன் சேர்ந்தவ ர்தானே? இப்பொழுது இவர்கள் "கொள்ளையில்" சிறந்துதானே விளங்குகிறார்கள்? அப்புறம் எப்படி இந்த யோக்கியர் இப்படி சொல்கிறார்?
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
03-மே-201917:35:54 IST Report Abuse
Sitaraman Munisamy அது பலிக்குமா .
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
03-மே-201914:33:30 IST Report Abuse
நக்கீரன் அ.தி.மு.க., வை தொண்டர்கள், மக்கள் காத்து வருகின்றனர் - எந்த தொண்டர்கள்? எந்த மக்கள்? நினைப்புதான் பொழப்ப கெடுக்கும்பாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X