வாரணாசி போலீஸ் எங்களை துரத்தினர்: தமிழக விவசாயிகள் புகார்

Added : மே 04, 2019 | கருத்துகள் (3) | |
Advertisement
'பிரதமர் நரேந்திர மோடியை காப்பாற்ற, எங்களை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து விட்டதால், வாரணாசி தொகுதியில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள், தலைமை தேர்தல் ஆணையத்தில், புகார் அளித்துள்ளனர்.தீவிரம்உ.பி.,யில் உள்ள வாரணாசி தொகுதியில், வரும், 19ம் தேதி, கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., வேட்பாளராக களம் காண்கிறார். அவரை

'பிரதமர் நரேந்திர மோடியை காப்பாற்ற, எங்களை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து விட்டதால், வாரணாசி தொகுதியில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள், தலைமை தேர்தல் ஆணையத்தில், புகார் அளித்துள்ளனர்.


தீவிரம்


உ.பி.,யில் உள்ள வாரணாசி தொகுதியில், வரும், 19ம் தேதி, கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., வேட்பாளராக களம் காண்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட, காங்கிரஸ் உட்பட, முக்கிய கட்சிகள் அனைத்துமே தீவிரம் காட்டின.இந்நிலையில் தமிழகம், தெலுங்கானாவைச் சேர்ந்த, 100 விவசாயிகள், வாரணாசிக்கு சென்று, மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றனர்.

ஆனால், பல்வேறு காரணங்களால், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று, டில்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து, ஒரு புகார் அளித்தனர்.பின், தமிழக விவசாய சங்க தலைவர் தெய்வ சிகாமணி, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்திலிருந்து, 40 விவசாயிகளும், தெலுங்கானாவிலிருந்து, 60 விவசாயிகளும், பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசியில் போட்டியிட சென்றிருந்தோம். ஆரம்பம் முதலே, அம்மாநில போலீசார், எங்களை மிரட்டியபடிஇருந்தனர்.

துாண்டுதல்

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை தராமல், தேர்தல் அதிகாரிகள், மதியம் வரை இழுத்தடித்தனர். இதனால், பல விவசாயிகளால், வேட்பு மனுக்களை முறையாக தாக்கல் செய்ய முடியவில்லை.சரியாக செய்த, 37 விவசாயிகளின் வேட்பு மனுக்களையும், தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்து விட்டனர். இதனால், வாரணாசி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.

விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, அரசியல்வாதி போல செயல்பட்டாரே தவிர, விவசாயிகளின் பிரதிநிதி போல செயல்படவில்லை. சில கட்சிகளின் துாண்டுதலின்படி, தான் செயல்பட்டதாக, அவரே கூறியுள்ளதால், அவர் பற்றி எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு, தெய்வசிகாமணி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
04-மே-201909:58:06 IST Report Abuse
Loganathan Kuttuva மொழி பிறர்ச்சனையாக இருக்கும்.டிபாசிட் தொகை தப்பியது என்று மகிழ்ச்சி அடையலாம்
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
04-மே-201908:50:30 IST Report Abuse
G  Mahalingam முதல் நாள் வந்து பண்ண வேண்டியதுதா. கடைசி நாள் வந்து பண்ணி தேர்தல் ஆணையத்தை குற்றம் சொல்ல வேண்டியது. இது மீடியா விளம்பரம் மட்டும்.
Rate this:
Cancel
04-மே-201901:48:36 IST Report Abuse
satheesh kumar neenga panra comeduku alavae illa..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X