சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாவிலும் பிரியாத தம்பதி

Added : மே 04, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 சாவிலும் பிரியாத தம்பதி

புதுச்சேரி:வயதான காலத்திலும்,இணை பிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி,சாவிலும் ஒன்று சேர்ந்தனர்.

புதுச்சேரி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரப்பன், 95; அரசு மருத்துவமனையில், கண்காணிப்பாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இவரது மனைவி குமுதா, 81; ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன்கள் இருவரும், பிரான்சில் உள்ளனர்.வீரப்பன், ஜெயலட்சுமி இருவரும், மகளுடன் வசித்து வந்தனர்.

கடந்த 30ம் தேதி, உடல் நலமின்றி, ஜெயலட்சுமி இறந்து விட்டார். மகன்கள் இருவரும், பிரான்சில் இருந்து வரவேண்டி இருந்ததால், ஜெயலட்சுமியின் உடலை, பிம்ஸ் மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்திருந்தனர்.வீரப்பனுக்கு ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், அவரிடம், கடைசி நேரத்தில் தகவலை தெரிவிக்கலாம் என, உறவினர்கள் இருந்தனர். குமுதாவை, உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மகன்கள் வந்ததை தொடர்ந்து, ஜெயலட்சுமியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். மனைவி இறந்ததை அறிந்த வீரப்பன், அதிர்ச்சியில் இறந்தார்.கணவன், மனைவி இருவரது உடலையும் ஒருசேர ஊர்வலமாக எடுத்து சென்று, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
10-மே-201912:50:26 IST Report Abuse
புரோகிதர் சொடலை வீரப்பன் மனைவி குமுதா சரி , ஜெயலட்சுமி யார் ?
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
09-மே-201911:45:30 IST Report Abuse
G.Krishnan அந்த தம்பதியினரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் . . . . . . . . பூரண வாழ்வை வாழ்ந்து, சாவிலும் பிரிக்கமுடியாது என்று நிரூபித்த அவர்களுக்கு இறைவன் நல்ல கதியையே கொடுப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-201911:26:54 IST Report Abuse
Yaro Oruvan RIP .. நல்ல முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து சென்றுள்ளனர்.. ஆத்மா சாந்தி அடையட்டும்.. கடைசி காலத்தில் இறப்புக்கு முன் வெளிநாடுகளில் வாழும் மகன் / மகள் வந்து பெற்றோர் அருகில் இருந்தால் அவர்களுக்கு ஒரு திருப்தி இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X