சாவிலும் பிரியாத தம்பதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாவிலும் பிரியாத தம்பதி

Added : மே 04, 2019 | கருத்துகள் (6)
 சாவிலும் பிரியாத தம்பதி

புதுச்சேரி:வயதான காலத்திலும்,இணை பிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி,சாவிலும் ஒன்று சேர்ந்தனர்.

புதுச்சேரி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரப்பன், 95; அரசு மருத்துவமனையில், கண்காணிப்பாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இவரது மனைவி குமுதா, 81; ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன்கள் இருவரும், பிரான்சில் உள்ளனர்.வீரப்பன், ஜெயலட்சுமி இருவரும், மகளுடன் வசித்து வந்தனர்.

கடந்த 30ம் தேதி, உடல் நலமின்றி, ஜெயலட்சுமி இறந்து விட்டார். மகன்கள் இருவரும், பிரான்சில் இருந்து வரவேண்டி இருந்ததால், ஜெயலட்சுமியின் உடலை, பிம்ஸ் மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்திருந்தனர்.வீரப்பனுக்கு ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், அவரிடம், கடைசி நேரத்தில் தகவலை தெரிவிக்கலாம் என, உறவினர்கள் இருந்தனர். குமுதாவை, உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மகன்கள் வந்ததை தொடர்ந்து, ஜெயலட்சுமியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். மனைவி இறந்ததை அறிந்த வீரப்பன், அதிர்ச்சியில் இறந்தார்.கணவன், மனைவி இருவரது உடலையும் ஒருசேர ஊர்வலமாக எடுத்து சென்று, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X