சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர் மர்ம சாவு

Added : மே 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுக்கோட்டை:நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்ட, புதுக்கோட்டை வங்கி ஊழியர், கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
புதுக்கோட்டை, பஞ்சாப் நேஷனல் வங்கியில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தவர், மாரிமுத்து, 42. கடந்த, 10 நாட்களுக்கு முன், இவர் மாயமானார். அவருடைய கார் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த இடத்தில் வங்கி ஆவணங்கள், 'சிசிடிவி' ஹார்ட் டிஸ்க் ஆகியவையும் எரிந்த நிலையில் கிடந்தன.

இதையடுத்தே, வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளுடன், மாரிமுத்து மாயமானது தெரியவந்தது.இதுகுறித்து தாமதமாக அறிந்த வங்கி அதிகாரிகள், எவ்வளவு நகைகள் காணாமல் போனது என்பது குறித்து, மூன்று நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். முறையாக கணக்கெடுப்பு முடிந்ததும், வங்கி சார்பில், மாரிமுத்து மேல் புகார் அளிக்க முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், மணல் மேல்குடி அருகே கோடியக்கரை கடற்கரை பகுதியில், அழுகிய நிலையில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது, மாரிமுத்துவின் உடல் என்று தெரிய வந்துள்ளது. நகைகளுடன் மாரிமுத்து மாயமாகிவிட்டார் என்று போலீசாரும், வங்கி அதிகாரி களும் நினைத்திருந்த நிலையில், அவர் மர்மமான முறையில் இறந்துள்ளது, அனைத்து தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் அவர்கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். அவர் எடுத்துச் சென்ற நகைகள் என்னவானது என்பதும், புரியாத புதிராக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-மே-201911:23:00 IST Report Abuse
Bhaskaran உடன்பணிபுரிபவர்களை சரியானமுறையில் விசாரித்தால் நகைகள் போன இடம் தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X