125 நாட்கள்-27 மாநிலங்கள் - 200 நிகழ்ச்சிகள் அசத்திய மோடி

Updated : மே 04, 2019 | Added : மே 04, 2019 | கருத்துகள் (40)
Advertisement

லோக்சபா தேர்தல் 4 கட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஜனவரியில் துவங்கி ஏப்ரல் வரை 125 நாட்களில் 27 மாநிலங்கள், சில யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஜாம்நகர் முதல் சில்சார் நகர் வரை அரசு விழாக்கள், , நலத்திட்டங்கள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட 200 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.narendramodi.in என்ற இணையத்தளத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் வருமாறு:


ஜனவரி 2019:

* வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தார்.
* மதுரை தோப்பூரில் ரூ1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
* திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.


பிப்ரவரி.2019-:


* ஒரு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் பயணம் செய்து லடாக், ஜம்மு, காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகள் என மூன்று நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி, பிரதான் மந்திரி ஷராம் யோகி மான்தான என்ற இரு திட்டங்களை அறிவித்தார்.
Advertisement

* வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து, குஜராத்தில் வைபிரன்ட் குஜராத் திட்டம் ஆகிய திட்டங்களை துவக்கினார்.
* பிப்.24-ம் தேதி உ..பி. மாநிலம் பிரக்யாராஜ் நகரில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடினார். இதன் மூலம் கும்ப மேளாவில் பங்கேற்ற முதல் பிரதமர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

மார்ச்.2019:


* தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு, இதுவரை ஐந்து முறை மோடி வருகை தந்துள்ளார். லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, மார்ச் 4 -ம் தேதி, அமேதி தொகுதியில் ஏ.கே -203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவக்கி வைத்தார்
* மார்ச் 27-ம் தேதி மிஷன் சக்தி திட்டம் நம் நாட்டின் வரலாற்றில், மிகவும் முக்கியமான ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பெருமை அடையும் வகையிலும், எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு கருதியும் நடந்துள்ள இந்த நிகழ்வு, நாட்டின் வரலாற்றில் முக்கியமானது என நாட்டு மக்களிடம் உரையாடி பாராட்டை பெற்றார்.
* குஜராத்தில் மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை நினைவு நாளில் பங்கேற்று தண்டியாத்திரை நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.


ஏப்ரல்:2019


* டில்லியில் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தை திறந்து வைத்தார்.

* டில்லி தல்காதோரா மைதானத்தில் வர்த்தகர்கள் மாநாடு நடத்தி நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடு்த்து வைத்தார். .

* ஏப்..25-ல் உ.பி. மாநிலம் வாரணாசியில் மெகா பேரணியை நடத்தினார் .இதில் தே.ஜ. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பேரணியில் லட்சகணக்கான மக்கள் திரண்டனர். பின்னர் கங்கை நதிக்கரையில் சிறப்பு ஆராதனை நடத்தினார்.
* டில்லியில் தனது இல்லத்தில் பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடன் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு பல்வேறு விஷயங்கள் குளித்து கலந்துரையாடினார்.

* இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையில் பிரதமர் மோடி 14 முறை மத்திய அமைச்சரவை கூட்டங்களை நடத்தியுள்ளார். 30 ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். நேற்று முன்தினம் ( மே.2-ம் தேதி ) போனி புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
* அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான காலா பானி சிறையில் கடந்த 1911-ம் ஆண்டு இந்துத்துவா தலைவரான வினாயக் தாமோதர் வீர சவர்க்கார் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் அமர்ந்து தியானம் செய்தார்.Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமநாதன் நாகப்பன் பிரதமர் வேலைக்கு வாய்ப்பு கொடுத்தால் தனக்கு தெரிந்த பிரச்சாரகர் வேலையை மட்டும் செய்வதற்கான சான்றாக இந்தச் செய்தியை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. பிரதமரையும் பிரச்சாரகரையும் வேறுபடுத்திப் பார்க்க மக்கள் தெரிந்து கொண்டால் நன்று.
Rate this:
Share this comment
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
04-மே-201921:13:29 IST Report Abuse
pazhaniappan
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
04-மே-201921:01:04 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நாடு நல்ல நிலையில் இயங்க வேண்டுமெனில் மாண்பமை பிரதம அமைச்சர் தொடர்ந்து இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தால் காணலாம். பல்லாண்டாக ஆண்டவனே விசும்பு பாத்தியமாக ஆள ஆசை படுவது தடுக்கப்படனும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X