சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது, மாத்திரை: பொள்ளாச்சியில் 159 மாணவர்கள் கைது

Updated : மே 04, 2019 | Added : மே 04, 2019 | கருத்துகள் (50)
Advertisement

கோவை : பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட போதை மருந்து, மாத்திரைகள் மற்றும் மதுபாட்டில்களுடன் விடிய விடிய ஆட்டம் போட்ட கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகரில், கணேஷ் என்பவருக்கு சொந்தமான 'அக்ரி நெஸ்ட்' என்ற அனுமதி இல்லாத சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் மது விருந்துடன் இரவு கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக, கேரளாவைச் சேர்ந்த சிலர், சமூக வலைதளம் மூலம் ஆட்களைச் சேர்த்துள்ளனர். முன்பதிவு செய்த வெள்ளியன்று இரவு ரிசார்ட்டிற்கு வந்த ஏராளமான இளைஞர்கள், மது, மற்றும் கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை பயன்படுத்தி போதை தலைக்கேறிய நிலையில் இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, கோவை காவல்துறை எஸ்.பி., சுஜித் குமார் தலைமையிலான போலீசார் ரிசார்ட்டில் ஆய்வு செய்து 150 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர், கோவையில் உள்ள பல்வேறு கல்லூரி படிக்கும் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த கேரள மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களின் விலை உயர்ந்த கார்களும், பைக்குகளும் பரிமுதல் செய்யப்பட்டன. விருந்துக்கு ஏற்பாடு செய்த மேலும் 6 பேர் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள ரிசார்ட் உரிமையாளர் கணேசை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, அனுமதியின்றி செயல்பட்டு வந்த அக்ரி நெஸ்ட் ரிசார்ட்டிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி சேத்துமடை, அண்ணாநகரை அடுத்துள்ளது 'அக்ரி நெஸ்ட்' எனப்படும் ரிசார்ட். இங்கு நேற்றிரவு (மே-3) கோவையை சுற்றியுள்ள கல்லுாரிகளில் படிக்கும் 159 மாணவர்கள் மது, போதை விருந்து நடத்தியுள்ளனர்.
விடிய விடிய ஆட்டம், பாட்டமாய் கொண்டாடியுள்ளனர். பெரிய பெரிய ஸ்பீக்கர்களை அலறவிட்டு ஆடித் தீர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் விருந்தில் அடிதடியும், கூச்சல், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து கோவை எஸ்.பி., சுஜித்குமார் தலைமையில் பொள்ளாச்சி டி.எஸ்.பி., விவேகானந்தன் உள்ளிட்ட போலீசார் ரிசார்ட்டை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 159 மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது.
அவர்களிடமிருந்து மது, கஞ்சா, போதை மாத்திரைகள், அபின் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஏராளமான மது பாட்டில்களையும் கைப்பற்றியுள்ளனர். அங்கு அனுமதியின்றி ரிசார்ட் நடத்தியவர்கள் சிலரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





இதுகுறித்து போலீசார் கூறுகையில், '' இந்த மாணவர்கள் தனியாக இன்ஸ்டாகிராம், வெப்சைட்டுகள் மூலம் இணைந்து அடிக்கடி இப்படி போதை விருந்துகளை நடத்தியுள்ளனர். நபர் ஒருவருக்கு இந்த முறை ஆயிரத்தி 200 ரூபாய் செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில், சில தமிழக மாணவர்களும் உள்ளனர். அடிக்கடி இவர்கள் இப்படி சந்தித்து தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றை கட்டுப்படுத்தவே அதிரடி ரெய்டு நடத்தினோம். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்த ரெய்டுகள் தொடரும்,'' என்றனர்.





ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தற்போது மாணவர்களின் போதை விருந்து, கைது நடவடிக்கைகள் மேலும் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.


ரிசார்ட்டுக்கு சீல் : இந்த நிலையில், அனுமதியின்றி இயங்கிய அந்த ரிசார்ட்டுக்கு சீல் வைக்க, கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
07-மே-201913:05:02 IST Report Abuse
ganapati sb எங்கள் கோவை அருகிலே இப்படி கூத்துக்கள் நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது தேவைக்கு அதிகமாக கூடுதல் பணம் உள்ளவர்கள் மது போதைமூலம் தனது உடல்நலத்தை கெடுத்துக்கொள்ளாமல் தேவைக்கே பணம் போதாமல் தனது சொந்தத்திலோ ஜாதியிலோ ஊரிலோ இருப்பவருக்கு உதவினால் மேம்பட்ட நல்லுணர்வை அனுபவிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
07-மே-201909:13:16 IST Report Abuse
Ganapathy ஏற்கனவே பொள்ளாச்சியில் நடந்த விபரீதம் முடிவதற்குள் இந்த வருங்கால தூண்கள் மீதும் பொள்ளாச்சியில் இப்படி கூத்தடிப்பது , அறிவு என்றல் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் போல. இதில் திராவிடம் ஆரியம் என்று பேச்சு வேறு. நேற்றைய செய்தியை பார்த்தால் நொய்டாவில் இதுபோல் ஒரு ஒழுக்கம் கெட பார்ட்டியில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் மாட்டிக்கொண்டார்கள் . ஆயி அப்பன் , பாட்டன் முப்பாட்டன் உழைத்து சம்பாதித்த காசை கரியாகும் இந்த கூட்டங்களை என்ன என்று சொல்வது , பின்னர் படித்துவிட்டு வந்தால் வேலை கிடைக்கவில்லை என்று புலம்பல், ..
Rate this:
Share this comment
Cancel
05-மே-201910:18:17 IST Report Abuse
ருத்ரா பொள்ளாச்சியில் குற்றம் மேலும் மேலும் அதிகரிப்பது நாட்டை தலை குனிய வைக்கிறது. கடுமையான நடவடிக்கை தேவை. மாணவர்கள் எதிர்காலம் குறித்து கல்வித்தறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள். கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை மருந்து மாத்திரைகள் விற்பவர்களை கண்டு கடும் தண்டனை தரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X