துருக்கி எச்சரிக்கை: இலங்கை புறக்கணிப்பு?

Updated : மே 04, 2019 | Added : மே 04, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பயங்கரவாதிகள், துருக்கி, இலங்கை

கொழும்பு: இலங்கையில் தேவாலயங்களில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்த உளவுத்துறை தகவல்ள் மீது அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 50 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக துருக்கி அளித்த தகவலையும் கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: துருக்கியில் கடந்த 2016 ஜூலை மாதம், அதிபர் தயீப் எர்டோகனை ஆட்சியிலிருந்து அகற்ற உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது. இதற்கு பெதுல்லா பயங்கரவாத அமைப்பு(பெடோ) தான் காரணம் என அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது. இதன் பிறகு, அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் வேறு நாடுகளுக்கு தப்பி சென்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவியது குறித்து இலங்கை அரசுக்கு துருக்கி தூதரக அதிகாரிகள் குழு தொடர்ச்சியாக தகவல் அளித்தது.





இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கான துருக்கி தூதர் துன்கா ஒஜூஹதார், இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சரும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி தலைவருமான ஜி.எல்.பெரிசிடம் தகவல் அளித்துள்ளார்.இந்த ஆவணங்களை, ராஜபக்சேவுடன் இணைந்து அதிபர் சிறிசேனாவிடம் வழங்கினர். தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் பெரிஸ் கூறுகையில், பெடோ அமைப்பு, டென்மார்க், ஆஸ்திரியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். அந்த நாடுகளுக்கு துருக்கி அதிகாரிகள் தகவல் அளித்தனர். அந்நாடுகள் நடவடிக்கை எடுத்தன. ஆனால், இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-201922:25:20 IST Report Abuse
ஆப்பு இனிமே ஆளாளுக்கு நாங்க எச்சரிக்கை குடுத்தோம்னு கெளம்பிருவாங்க...அவிங்க நாடுல நடந்த தாக்குதலையே தடுக்க முடியாதவங்க அடுத்த நாட்டுக்கு எச்சரிக்கை குடுப்பாங்களாம். செம காமெடி.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-மே-201922:09:15 IST Report Abuse
J.Isaac அப்படியென்றால் மறைமுகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
04-மே-201921:54:36 IST Report Abuse
Ramamoorthy P ஈழ தமிழர்களை ஒழித்துக்கட்ட முஸ்லிம்களை தாஜா செய்து பழக்கப்பட்டுவிட்ட ஆட்சியாளர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X