பொது செய்தி

இந்தியா

51 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஐந்தாம் கட்டத் தேர்தல்

Updated : மே 05, 2019 | Added : மே 04, 2019 | கருத்துகள் (8)
Advertisement
பிரசாரம், தேர்தல்

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், ஐந்தாம் கட்ட ஓட்டுப் பதிவு, ஏழு மாநிலங்களில் உள்ள, 51 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில், நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது.

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 11ல், 91 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 69.50 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட, 13 மாநிலங்களில் உள்ள, 95 தொகுதிகளுக்கு, ஏப்., 18ல் நடந்த தேர்தலில், 69.44 சதவீத ஓட்டுகள் பதிவாகின.







ஒத்தி வைப்பு

தமிழகத்தின், வேலுார் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது.மூன்றாம் கட்டத்தில் தேர்தலை சந்தித்த, 116 தொகுதிகளில், 65.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த மாதம், 29ல் நடந்த நான்காம் கட்டத் தேர்தலில், 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின.இந்த நிலையில், ஐந்தாம் கட்டத்தில், ராஜஸ்தான் உட்பட, ஏழு மாநிலங்களில் உள்ள, 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது. உத்தர பிரதேசத்தில், 14; ராஜஸ்தானில், 12; மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில், தலா, ஏழு; பீஹாரில், ஐந்து; ஜார்க்கண்டில், நான்கு தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.இதைத் தவிர, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மற்றும் அனந்த்நாத் தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.இதுவரை, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் முடிந்துள்ளது. நாளை நடக்க உள்ள, ஐந்தாம் கட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீரிலும் தேர்தல் முடிகிறது.







பிரசாரம்

நாளை ஓட்டுப் பதிவு நடக்கும், 51 தொகுதிகளிலும், நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது.ஆறாம் கட்டத் தேர்தல், 12ம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல், 19லும் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, 23ல் நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-மே-201921:26:05 IST Report Abuse
அசோக்ராஜ் அடுத்த முறை டாஸ்மாக் நாட்டிலும் ஏழு கட்டமா தேர்தல் வையுங்க. நிதானமா பிரச்சாரம் செய்ய வசதியா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
05-மே-201919:07:22 IST Report Abuse
oce பதினெட்டு வயது வாக்காள பையனுக்கு சாக்லெட் கொடுத்தால் போதும் சாக்லெட்டை வாயில் போட்டு சப்பிய படி ஓட்டை சாக்லெட் சபெளையருக்கு போடுவான். ராகுல் பிரதமரானால் இந்திய மக்கள் ஒருவர் விடாமல் அனைவரும் வாக்காளர்களாக மாற வேண்டும் என்று தன் தந்தை செய்தது போல் எல்கேஜி யுகேஜி படிக்கும் பசங்களுக்கும் வாக்குரிமை கொடுத்து விடுவார்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
05-மே-201919:01:00 IST Report Abuse
oce கடையில் பொருள் வாங்கினால் பிரிண்ட் பண்ணி தரும் ரசீது வீட்டுக்கு வருவதற்குள் அழிந்து எழுத்துக்கள் மறைந்து விடுகிறது. மின் அணு வாக்கு இயந்திர பெட்டியில் உள்ள சின்னங்களை அமுக்கினால் அந்த சின்னம் அதே இடத்தில் நீண்ட நாட்கள் அப்படியே இருக்குமா. அல்லது மங்கலாகுமா அல்லது மறையுமா என்பது தெரிய வில்லை. காய்ச்சிய கஞ்சியை உப்பு போட்டவுடன் சுடச்சுட குடித்தால் தான் ருசிக்கும். அதை ஒரு மாதம் மூடி வைத்து குடிக்க உபயோகித்தால் எப்படி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X