51 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஐந்தாம் கட்டத் தேர்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

51 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஐந்தாம் கட்டத் தேர்தல்

Updated : மே 05, 2019 | Added : மே 04, 2019 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: லோக்சபா தேர்தலில், ஐந்தாம் கட்ட ஓட்டுப் பதிவு, ஏழு மாநிலங்களில் உள்ள, 51 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில், நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது.லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 11ல், 91 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 69.50 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட, 13 மாநிலங்களில் உள்ள, 95
பிரசாரம், தேர்தல்

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், ஐந்தாம் கட்ட ஓட்டுப் பதிவு, ஏழு மாநிலங்களில் உள்ள, 51 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில், நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது.

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 11ல், 91 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 69.50 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட, 13 மாநிலங்களில் உள்ள, 95 தொகுதிகளுக்கு, ஏப்., 18ல் நடந்த தேர்தலில், 69.44 சதவீத ஓட்டுகள் பதிவாகின.


latest tamil news





ஒத்தி வைப்பு

தமிழகத்தின், வேலுார் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது.மூன்றாம் கட்டத்தில் தேர்தலை சந்தித்த, 116 தொகுதிகளில், 65.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த மாதம், 29ல் நடந்த நான்காம் கட்டத் தேர்தலில், 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின.இந்த நிலையில், ஐந்தாம் கட்டத்தில், ராஜஸ்தான் உட்பட, ஏழு மாநிலங்களில் உள்ள, 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது. உத்தர பிரதேசத்தில், 14; ராஜஸ்தானில், 12; மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில், தலா, ஏழு; பீஹாரில், ஐந்து; ஜார்க்கண்டில், நான்கு தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.இதைத் தவிர, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மற்றும் அனந்த்நாத் தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.இதுவரை, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் முடிந்துள்ளது. நாளை நடக்க உள்ள, ஐந்தாம் கட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீரிலும் தேர்தல் முடிகிறது.


latest tamil news





பிரசாரம்

நாளை ஓட்டுப் பதிவு நடக்கும், 51 தொகுதிகளிலும், நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது.ஆறாம் கட்டத் தேர்தல், 12ம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல், 19லும் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, 23ல் நடக்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X