யார் அந்த 40 பேர்?

Updated : மே 05, 2019 | Added : மே 05, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
யார் அந்த 40 பேர்?

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, கோபக்காரர் என, பெயரெடுத்தவர். இப்போது, தேர்தல் பிரசாரத்தில், அவரின் கோபம் எல்லைத் தாண்டிவிட்டது. இதற்குக் காரணம், பிரதமர் மோடி.சமீபத்தில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, 'மம்தா கட்சியின், 40 எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்' என, சொல்லிவிட்டார், மோடி. இது பெரும் புயலைக் கிளப்பியது.'இது சுத்த பொய்' என்றார், மம்தா. வெளியே இப்படி சொன்னாலும், 'இதில் உண்மை இருக்குமோ' என, மம்தாவை யோசிக்க வைத்துள்ளதாம், மோடியின் பேச்சு. இதன் விளைவாகத் தான், மாநில உளவுத்துறை டி.ஜி.பி., மற்றும் மூத்த அதிகாரிகளை அழைத்து, 'டோஸ்' விட்டாராம், மம்தா.


latest tamil news


'என்ன நடக்கிறது இங்கே;

நீங்களும், பா.ஜ., பக்கம் போய்விட்டீர்களா' என, கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம், மம்தா. பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது தான் நல்லது என, அதிகாரிகள் மவுனம் காத்தனராம்.'எம்.எல்.ஏ.,க்கள் யாராவது டில்லி சென்று மோடியைச் சந்தித்துள்ளனரா; பிரதமர் சொன்ன, அந்த, 40 பேர் யார் என்ற பட்டியலை தாருங்கள்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம், மம்தா.மேற்கு வங்கத்தில், 294 தொகுதிகள் உள்ளன. இதில் மம்தா கட்சி, 211 எம்.எல்.ஏ.,க்களைப் பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வருகிறது. ஒரு வேளை, மோடி சொன்னபடி, 40 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறினாலும், ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என, மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆறுதல்பட்டுக் கொண்டுள்ளனர்.இன்னொரு பக்கம், 'மோடி சொன்னது உண்மையா; மம்தாவை மிரட்டுவதற்காக, வெறுமனே பேச்சுக்கு சொன்னாரா' என, பா.ஜ.,வினரும் குழப்பத்தில் உள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மே-201908:26:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜகவால் இப்படி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தான் ஆட்சி அமைக்க வக்கிருக்கிறது.. தேர்தலில் ஜெயித்து அல்ல.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மே-201908:25:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மோசடி தினகரன் மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-மே-201921:21:47 IST Report Abuse
அசோக்ராஜ் மோடி ஆட்டுவித்தால் ஆடாத எதிர்க்கட்சித் தலைவர் எவருமே இல்லை. கிரிமினல்களுக்கு கிரிமினாலிட்டிக்கு வெளியே அறிவு வேலை செய்யாதோ? ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மே-201908:23:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பெரிய திருடனை பாத்து சின்ன திருடன் பயப்படத்தான் செய்வான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X