ரூ. 20 ஆயிரம் பணம்: பா.ஜ.மீது பிரியங்கா புகார்

Updated : மே 05, 2019 | Added : மே 05, 2019 | கருத்துகள் (21)
Advertisement
ரூ. 20 ஆயிரம் பணம்: பா.ஜ.மீது பிரியங்கா புகார்

அமேதி: அமேதி தொகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக பா.ஜ. வழங்கி வருகிறது என பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் காங். தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்த காங்.பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியது, அமேதி தொகுதிகுட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் காங். தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீசாக கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறோம்.





ஆனால் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பா.ஜ. லஞ்சமாக கொடுத்து வருகிறது.ராகுலை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.வின் ஸ்மிருதி இராணி தேர்தலுக்காகத்தான் இத்தொகுதிக்கு பல முறை வந்து போகிறார். அவர் நாடகமாடுகிறார் அதை கிராமவாசிகள் நம்பி ஏமாறவேண்டாம். ஆனால் ராகுல் அப்படியல்ல இங்குள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
10-மே-201913:15:01 IST Report Abuse
TamilArasan தோல்விக்கான காரணத்தை இப்பொழுதே கண்டுபிடித்து விட்டாகிவிட்டது... கூடவே உங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வாக்கு எந்திரத்தியும் சேர்த்துக்கங்க... வயநாட்டிற்கு தப்பி வந்ததில் நாம் புரிந்துகொள்ளலாம் பப்பு இந்த முறை அமேதியில் பாஸாக மாட்டார் என்று...
Rate this:
Share this comment
Cancel
06-மே-201910:39:11 IST Report Abuse
Ganesan Madurai பப்பூவும் சோனியாவும் பங்குதாரர்களாக உள்ள மருத்துவமனையில் ஆயுஷ்மான் பாரத் அட்டையிருந்தும் மருத்துவம் கொடுக்கமறுத்து சிறுவன் மரணம்😡
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
06-மே-201905:52:35 IST Report Abuse
Indhuindian சேராத இடம் தனிலே சேர வேண்டாம் - ஞாபகம் இருக்கிறதா. வோட்டுக்கு நோட்டு கொடுத்து திருமங்கலம் போர்முலா, ஆர் கே நகர் போர்முலா என்று தனித்தன்மையை திரும்ப திரும்ப நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் திராவிட கட்சிகளுடன் கூட நட்பு கொண்டால் இந்த மாதிரிதான் சொல்ல தோணும். இந்த அம்மாவோட பாட்டிய கழுவி கழுவி பெண் என்றும் பாராமல் வாய்கூசாமல் கேட்க இருவருக்கும் பேச்சுகளையெல்லாம் இந்த அம்மாவுக்கு தெரியுமா? அப்படிப்பட்ட கட்சியோட கூட்டணி வெச்சா அந்த புத்தி தானே வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X