கடலுார்:கடலுார் பாரதி சாலையில், பள்ளத்தில் லாரி சிக்கியதால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்தையொட்டி உள்ள பெட்ரோல் பங்கில், ஒரு லாரிக்கு நேற்றிரவு 10:30 மணிக்கு டீசல் நிரப்பினர். டீசல் நிரப்பி முடிந்ததும், லாரியை டிரைவர் புதுநகர் போலீஸ் நிலையம் நோக்கி இயக்கினார்.
அப்போது, சாலையோர பள்ளத்தில் லாரியின் பின்பக்க சக்கரம் சிக்கியது. இதனால் லாரியை மேற்கொண்டு இயக்கமுடியவில்லை. லாரி, சாலையின் குறுக்கே நின்றதால், அப்பகுதியில் 11:00 மணி வரை 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதனால், கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக வந்த வாகனங்கள் பாரதி சாலையில் ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டன.தகவலறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக, பள்ளத்தில் சி்க்கிய லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.