தடையை மீறி பிரசாரம்: பிரக்யா சிங்குக்கு நோட்டீஸ்

Updated : மே 05, 2019 | Added : மே 05, 2019 | கருத்துகள் (47)
Advertisement

போபால் : பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். எனவே, அவருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.






மத்திய பிரதேச மாநிலம், போபால் மக்களைவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரக்யா சிங் தாகூர் போட்டியிடுகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறியிருந்தார்.

இதை அடுத்து பிரக்யா தாகூரை, 72 மணி நேரங்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால்,கடந்த 2ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பிரக்யா தாகூர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது.





இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் பிரக்யா சிங் தாகூருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரக்யா, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர். எனவே, அவருக்கு பா.ஜ.,வில் 'சீட்' கொடுக்கப்பட்டதே பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி தேர்தலில் ஓட்டு போடும் மக்களுக்கு காசு வழங்கி வெற்றிவாகை சூடும் திருமங்கலம் சூத்திரத்தை உலகோர்களுக்கெல்லம் தருவித்த நமது திராவிடக் கூட்டம் இந்த பெண் சாமியார் தேர்தல் நடத்தை மீறியதாக வருத்தப்படுவது மிகவும் வேதனையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
06-மே-201910:08:36 IST Report Abuse
Mohamed Ilyas கண்துடைப்பு தேஜபகதூர் என்கிற ராணுவ வீரரின் வேட்புமனுவை நிராகரித்து இந்த குற்றவாளியின் வேட்புமனுவை ஏற்றதே மிகப்பெரிய குற்றம்
Rate this:
Share this comment
Cancel
smoorthy - bangalore,இந்தியா
06-மே-201909:58:20 IST Report Abuse
smoorthy தேர்தல் ஆணையத்தால் ஒரு முறை 72 மணி நேரம் பிரச்சாரம் செய்ய கூடாது என சொன்னார்கள்/ஆனால் அதையும் மீறி பிரச்சாரம் செய்து உள்ளார்/ஏன் தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டி இட தடை விதிக்க கூடாது/தேர்தல் ஆணையம் பல் இல்லாத பாம்பு/அப்போ அப்போ வந்து சவுண்ட் விட்டு போகிற மாதிரி உள்ளது /மறைந்த திரு சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையராக இருந்தது பொற் காலம் ஆகும்/இப்போது உள்ள ஆணையம் செயல் அற்றது அல்லது பவர் இல்லாதது போல் உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X