அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கொதிப்பது ஏன் ? இ.பி.எஸ்.,

Updated : மே 05, 2019 | Added : மே 05, 2019 | கருத்துகள் (45)
Advertisement

சேலம்; அமமுக கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் வழக்கு போடுகிறார் ? என முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.





தமிழகத்தில் 3 மாதத்தில் உள்ளாட்சித்தேர்தல் நிச்சயம் நடைபெறும்; உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகரிடம் அதிமுக புகார் அளித்தால், சம்பந்தமே இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் கொதிக்கவேண்டும். இதன்மூலம் திமுகவிற்கும் அமமுகவிற்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தோல்வி பயத்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக ஸ்டாலின் கூறுகிறார் எனமுதல்வர் கூறினார். இயற்கை ஒத்துழைத்தால் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.


சேலம் விமான நிலையத்தில் முதல்வர் மேலும் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் அவகாசம் 3 மாதம் கேட்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தில் நிச்சயம் தேர்தல் நடைபெறும். 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலுக்கு முதலில் திமுகதான் தடை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தேர்தல் தள்ளிபோனது. தோல்வி பயம் காரணமாக வெவ்வேறு யுக்திகளை ஸ்டாலின் கையாளுகிறார்.
எங்கள் கட்சியில் விதிமீறல் செய்த காரணத்தினால் 3 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமமுக கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் வழக்கு போடுகிறார் ? ஸ்டாலின் ஏன் கொதிக்கிறார் ? இதில் இருந்து இருவரும் கூட்டு வைத்துள்ளனர் என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள். ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் திட்டமிட்ட சதி நடக்கிறது.





22 சட்டமன்ற இடை தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று கூறும் ஸ்டாலின், எதற்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்.
திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-மே-201904:28:17 IST Report Abuse
meenakshisundaram ஒருவர் மடியில் இன்னொருவர் உட்கார்ந்து அசிங்க சட்ட சபை நடத்திய' ரெட்டை சபாநாயகர் முறை 'இவரது அப்பாவால் நடத்தப்பட்டது இவருக்கு தெரிய வில்லை .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மே-201901:59:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "கேம் ஆஃப் த்ரோன்" னில் ஆர்யா ஸ்டார்க்கின் பஞ்ச் டயலாக் ஒண்ணு.. "வாட் டூ யூ சே டு தி காட் ஆஃப் டெத்" ன்னு அவரோட கோச் கேட்பார். அதுக்கு "நாட் டுடே" ன்னு ஆர்யா பதில் சொல்லுவா.. அடிக்கடி வரும்.. இந்த வசனம் தான் நம்ம பாலியல் அடிமைகளுக்கு பிடிச்சது. "உள்ளாட்சி தேர்தல் எப்ப நடத்தப்படும்" ன்னு எப்ப கேட்டாலும், அடிமை அரசு "இப்போது முடியாது" ன்னு சாவை கண்டு ஓடுற மாதிரி பதறி அடிச்சிக்கிட்டு ஓடும்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-மே-201901:50:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஸ்டாலின் கொதிப்பதேன்? ஹைவேஸ் கொள்ளையர் வெந்து சாவதேன்.? நாற்காலிக்கு தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X