கூட்டணியை உடைக்க மோடி முயற்சி; மாயாவதி பீதி

Updated : மே 05, 2019 | Added : மே 05, 2019 | கருத்துகள் (33)
Advertisement

லக்னோ : பகுஜன்சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியை உடைக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.






' ஒருபுறம் மாயாவதிக்கு ஆதரவு தந்துவிட்டு மறுபுறம் காங்கிரசுக்கு ஆதரவான செயல்களில் சமாஜ்வாதி கட்சி ஈடுபட்டுவருவதாக பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார்.





இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி; சமாஜ்வாதி கட்சியுடனான தங்களது கூட்டணியை உடைக்க, அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிரதமர் மோடி பல்வேறு வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தங்களது கூட்டணிக்கு, உத்தரப்பிரதேச மாநில மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு உள்ளது. ''சமாஜ்வாதி கட்சியுடனான எங்களது கூட்டணியை பாஜகவால் உடைக்க முடியாது,'

சமீபத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார். அது அந்த கட்சியின் தலைவரும், மே.வங்க., முதல்வருமான மம்தாவுக்கு கிலியை ஏற்படுத்தியது.





பா.ஜ., மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தங்கள் கட்சியில் இணைவார்கள் என்று கூறியிருந்தார். அதற்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மறுப்பு தெரிவித்த அன்றே பா.ஜ.,வில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., ஒருவர் இணைந்தார்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பீதியடைந்திருக்க கூடும் என்கின்றனர், பா.ஜ.,வின் சீனியர் தலைவர்கள் சிலர்.



பெண் பிரதமர் அகிலேஷ் ஆசை


இதற்கிடையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்; வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் வெற்றியை பொறுத்து பெண் ஒருவர் பிரதமராக ஆதரவு அளிப்பேன் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
06-மே-201915:31:42 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இவர் கூட எம்புட்டு ஆளு இருக்காங்க தெரியுமா மோடிக்குப் பின்னாடி எவ்ளோ பேரு இருக்காங்க ஹஹஹஹஹ ஹிஹிஹிஹிஹி
Rate this:
Share this comment
Cancel
06-மே-201912:58:20 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணி வைத்தால் மக்கள் ஏற்பார்களா? அதுபோல தான் சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
06-மே-201912:04:11 IST Report Abuse
M.COM.N.K.K. கூட்டணியே இல்லாதபோது கூட்டணியை எப்படி உடைக்கமுடியும்.உங்கள் கூட்டணியை யாரும் அங்கீகரிக்கவேயில்லயே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X