சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் ஆன 15 நாளில் நர்ஸ் மர்ம சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை

Added : மே 05, 2019 | கருத்துகள் (3)
Advertisement


பெரம்பலுார்: அரியலுார் அருகே, திருமணமான 15 நாளில், நர்ஸ் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார்.
அரியலுார் மாவட்டம், மேலுார் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் பன்னீர்செல்வம்,30. இவரும், பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகள் ரேகா,27, என்பவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் பணியாற்றி வந்த பன்னீ்ரசெல்வமும், சென்னையில் நர்ஸாக பணியாற்றி வந்த ரேகாவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் கடந்த 18ம் தேதி அவரவர் ஊருக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து, கடந்த 19ம் தேதி பெரியாக்குறிச்சி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, சூரியமணல் கிராமத்தில் தம்பதிகளாக வசித்து வந்தனர்.
இவர்களது திருமணத்துக்கு ரேகாவின் அம்மா அஞ்சலை எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு ரேகாவை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால், ரேகாவும், பன்னீர்செல்வமும் ஜெயங்கொண்டம் சுபம் லாட்ஜில் ரூம் எடுத்து, கடந்த சில நாட்களாக தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 7:00 மணியளவில் பன்னீர்செல்வம் ஷாம்பு வாங்க கடைக்கு சென்றிருந்ததாக தெரிகிறது. அப்போது, அறையில் துப்பட்டாவால் ரேகா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ரேகாவை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், ரேகாவை பன்னீர்செல்வம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ரேகாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., கென்னடி வழக்கு பதிந்து விசாரிக்கிறார். திருமணமாகி 15 நாட்களே ஆவதால், ரேகாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என உடையார்பாளையம் ஆர்.டி.ஓ., ஜோதி விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
15-மே-201911:49:36 IST Report Abuse
Ramesh Sundram தனியார் டிவி இல் வரும் சீரியல்களே இதற்க்கு காரணம் என்று சொல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201909:09:50 IST Report Abuse
Srinivasan Kannaiya எந்த ஆயீஅப்பனும் தன் மகளுக்கு கெட்டதை செய்யமாட்டான் ..அதை இந்த இளம் வயசு பெண்கள் உணரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201909:08:48 IST Report Abuse
Srinivasan Kannaiya வர வர பெண்கள் ஏனோ காதலில் கருகிவிடுகின்றனர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X