அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
35 எம்.எல்.ஏ.,க்களை இழுக்க வியூகம்
ஸ்டாலின் - தினகரன் ரகசிய திட்டம்

அ.தி.மு.க.,வில் இருந்து, 35 எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதன் வாயிலாக, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை மேற்கொள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும், 19ம் தேதி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி உட்பட, 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கு சேர்த்து, வரும், 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியானதும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்பு, எதிர்க்கட்சிகளிடம் உள்ளது. தற்போது, 88 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும், தி.மு.க.,வுக்கு, ஆட்சி அமைக்க, 29 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. 117 எம்.எல்.ஏ.,க் கள் இருந்தால், ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும்.


தற்போது, காங்கிரசிடம், எட்டு, எம்.எல்.ஏ.,க் கள், முஸ்லிம் லீக்கிடம், ஒரு எம்.எல்.ஏ., என, ஒன்பது பேர் உள்ளனர். காங்கிரஸ் - எம்.எல்.ஏ., வசந்தகுமார், கன்னியா குமரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றால், அக்கட்சிக்கு, ஏழு, எம்.எல்.ஏ.,க்கள் தான் இருப்பர்.எனவே, அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க, அந்த பலம் போதாது. இடைத்தேர்தலை சந்திக்கும், 22 சட்டசபை தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்று, ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எனவே, அ.ம.மு.க.,வின்ஆதரவை, தி.மு.க., மேலிடம் நாடிஉள்ளது.

ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்களில், ஒரு பங்கு


அணி தாவினால், ஆட்சியை கவிழ்த்து விடலாம். எனவே, 30 முதல், 35 எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதற்கு, தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் ரகசிய பேச்சு நடத்திய தகவல் வெளியாகிவுள்ளது. சமீபத்தில், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டில், ஸ்டாலின் மற்றும் தினகரனுக்கு நெருக்க மானவர்கள், சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.



இந்த சந்திப்பு விவகாரம், உளவுத்துறை வாயிலாக, ஆளுங்கட்சி மேலிடத்திற்கு தெரிய வந்ததும், 'தி.மு.க.,வின், 'பி டீம்' ஆக, அ.ம.மு.க., செயல்படுகிறது' என்றும், 'ஸ்டாலினும், தினகரனும் ரகசிய உறவு வைத்துள்ளனர்' என்றும், அ.தி.மு.க., கூறி வருகிறது.

35 எம்.எல்.ஏ.,வியூகம், ஸ்டாலின்,தினகரன், ரகசிய திட்டம்,





இந்த ரகசிய சந்திப்பின் போது,திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய, இரு தொகுதிகளிலும், 30 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ஓட்டுகளை, அ.ம.மு.க., பெற வியூகம் அமைத்துஉள்ளனர். இந்த இரு தொகுதிகளில், அ.ம.மு.க., அதிக ஓட்டுகளை பிரிக்கும்போது, அது, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.சூலுார், அரவக்குறிச்சி தொகுதிகளில், அ.ம.மு.க.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. அதனால், அங்கு வெற்றி பெற முடியாது

Advertisement

என்பதால், இந்த தொகுதி களில், தி.மு.க., வெற்றிக்கு மறைமுகமாக உதவ, அ.ம.மு.க., முடிவு செய்து உள்ளது.

இதற்கிடையில், அ.தி.மு.க.,வில் உள்ள, தினகரன் ஆதரவு, 'ஸ்லீப்பர் செல்' வாயிலாக, 30 - 35 எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கவும், இரு கட்சிகளும் ரகசிய உடன்பாடு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.


பட்டியல், 'ரெடி!'



கோவை மாவட்டத் தில், மூன்று பேர்; சென்னை மாவட்டத்தில், இரண்டு; ஈரோடு மாவட்டத்தில், இரண்டு; திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டு. தேனி மாவட்டத்தில், ஒருவர், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்த்து, நான்கு பேர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருவர்; வேலுார், திருவண்ணாமலை மாவட்டத்தில், இருவர்; மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில், இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள் என, 35 பேர் பட்டியல் தயாராகி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan Subramanian - Palayamkottai,இந்தியா
13-மே-201911:42:11 IST Report Abuse

Muthukrishnan Subramanianவிநாச காலே விபரீத புத்தி. தமிழில் - ஒன்று கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

Rate this:
karutthu - nainital,இந்தியா
12-மே-201919:36:20 IST Report Abuse

karutthuஇரண்டு பெரும் உள்குத்து தான் .பணத்திற்காக ,பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் ஆ தி மு க வில் இருக்கும் சில கருப்பு ஆடுகள் இவர்களுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டார்கள் .சிங்கத்திடம் இருந்து தப்பி புலியிடம் மாற்றிக்கொள்வார்கள் .இந்த மாதிரி ஆள்களை கடவுள் ஒரு முடிவு கட்டுவார்

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11-மே-201919:37:45 IST Report Abuse

meenakshisundaramஎதுக்கு முப்பத்தஞ்சு பேர் மட்டுமே ?எல்லோரையுமே இழுத்துக்கொள்ளலாமே ?தமிழன்தான் தயாராக இருக்கானே?கொஞ்சம் காசு வேணுன்னா கூட கேட்பான்,அவ்வளவுதானே?

Rate this:
மேலும் 85 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X