வாடகை உயர்வால் விழி பிதுங்கும் தொழிலாளர்கள்| Dinamalar

வாடகை உயர்வால் விழி பிதுங்கும் தொழிலாளர்கள்

Added : மே 05, 2019 | |
பல்லடம், : திருப்பூர் மற்றும் பல்லடத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி, சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன.வேலையை நம்பி தங்கி பிழைப்பு நடத்த வரும் தொழிலாளர்களுக்கு, பல்லடத்திலுள்ள வீட்டு வாடகை கட்டணம், விழி பிதுங்க வைத்து

பல்லடம், : திருப்பூர் மற்றும் பல்லடத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி, சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன.வேலையை நம்பி தங்கி பிழைப்பு நடத்த வரும் தொழிலாளர்களுக்கு, பல்லடத்திலுள்ள வீட்டு வாடகை கட்டணம், விழி பிதுங்க வைத்து வருகிறது.கடந்த ஆண்டு ஆக., மாதம் மறு சீராய்வு செய்யப்பட்ட பின், நகராட்சிகளில், சொத்து வரி, வீட்டு வரி, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, முன்பு இருந்ததை காட்டிலும், மூன்று மடங்கு அதிக வீட்டு வரி கட்டணத்தை, உரிமையாளர்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்த கட்டண சுமையை ஏற்க முடியாத வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களிடம் அதை வசூலித்து வருகின்றனர். அதனால், பல்லடத்தில், குறைந்த பட்ச வீட்டு வாடகையானது, 5 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானத்தை கொண்டு, இந்த வீட்டு வாடகையை செலுத்த முடியாமல், தொழிலாளர்கள் கடும் அதிக்குள்ளாகி வருகின்றனர்.'திருப்பூரிலுள்ள மக்கள் நெருக்கடி, வசதியின்மை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, தொழிளார்கள் பலர், பல்லடம் அவிநாசி, காங்கயம் என, புறநகர் பகுதிகளுக்கு குடியேறுகின்றனர்.

அவ்வகையில், பல்லடத்தில் குடிபெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கு, இங்குள்ள வீட்டு வாடகை கட்டணம் விழி பிதுங்க வைத்து வருகிறது.அடிப்படை வசதிகளற்ற குடியிருப்புகளுக்கும், குறைந்த பட்ச கட்டணமாக, 5,000 முதல் 7,500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.நகராட்சி உயர்த்திய வீட்டு வரி சொத்து வரி உயர்வை, வாடகைக்கு வருபவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. அதனால், வேலையை நம்பி பிழைப்பு நடத்த வரும் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கே சென்று வாழ்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.வீட்டு வாடகை கட்டண உயர்வை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என்கிறார்கள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X