சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் சீண்டல்: 'போக்சோ'வில், தி.மு.க., பிரமுகர் கைது

Added : மே 06, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

நீலகிரி:நீலகிரி அருகே, சிறுவர்களுக்கு ஒயின் கொடுத்து மயக்கி, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள நெல்லியாளம், டான்டீ சரகம்- --3 பகுதியைச் சேர்ந்தவர் திராவிடமணி, 54; தி.மு.க., கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின், மாவட்ட துணை அமைப்பாளர். கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி குழு தலைவர்.இவர், தன் வீட்டருகில் உள்ள சிறுவர்களுக்கு, 'லேப்டாப்'பில் சினிமா காண்பிப்பது, 'கேம்ஸ்' விளையாட வைப்பது, சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது போன்றவற்றை செய்து வந்துள்ளார்.


வலியுறுத்தல்


அப்போது, இரு சிறுவர்களுக்கு, வீட்டில் தயாரித்த நெல்லிக்காய், திராட்சை ஒயின் வழங்கி, மயக்கம்அடைய செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஒரு சிறுவனின் தந்தை, சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தார்; வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால், 'சைல்டு லைன்' நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் வலியுறுத்தினர்.

போலீசார் விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தில், திராவிட மணியை கைது செய்தனர். 'இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்; நுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்' என, போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி கர்ப்பம்

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள சாத்தனுாரைச் சேர்ந்தவன் செந்தில்குமார், 37; ஓட்டலில், பரோட்டா மாஸ்டர். இவனுக்கு, திருமணமாகி, மனைவி, மகன் உள்ளனர்.செந்தில்குமார், அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமியிடம், ஆசை வார்த்தை கூறி, பழகி வந்துள்ளான். யாரிடமாவது கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டி, பல முறை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.நேற்று முன்தினம், அச்சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், செந்தில் குமார், சிறுமியை ஏமாற்றி கர்ப்பிணியாக்கியது தெரிந்தது.இதையடுத்து, 'போக்சோ' சட்டம் மற்றும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிந்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-மே-201914:46:30 IST Report Abuse
Vijay D Ratnam கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் நடந்தது போல கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமா.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-மே-201907:30:49 IST Report Abuse
Bhaskaran அன்னாருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்குமாறு கழகத்துக்கு கோரிக்கை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X