அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Updated : மே 06, 2019 | Added : மே 06, 2019 | கருத்துகள் (75)
Advertisement

புதுடெல்லி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீசுக்குஇடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட், அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர்.அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்


முன்னதாக, அ..தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அவர்கள் 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பினார்.

அதில், ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கடந்த ஏப்ரல் 30 அன்று அனுப்பி உள்ள நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக,சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 எம்.எல்.ஏ.,க்களில் 2 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், தமிழக சபாநாயகர் தனபால், தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், சபாநாயகர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டிருந்தனர்.


வழக்கு :


அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள் சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும், தி.மு.க.,. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.


நோட்டீஸ் :


அதன்படி, 'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.


பின்னடைவு :


சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை காரணமாக, அதிருப்தி எம்.எல்..ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்ற முயற்சிக்கும் அ.தி.மு.க.,வின் நோக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
07-மே-201916:26:48 IST Report Abuse
M.COM.N.K.K. சபாநாயகர் எடுக்கும் முடிவை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. நீதிமன்றம் கட்டுப்படுத்தினால் சபாநாயகர் பதவியே தேவை இல்லை. சபாநாயகருக்கு ஆலோசனைகள் மட்டுமே சொல்லமுடியும் அவர் எடுக்கும் முடிவை யாரும் தடுக்க சட்டத்தில் இடமில்லை என்றே நினைக்கிறோம்
Rate this:
Share this comment
Karunan - udumalpet,இந்தியா
09-மே-201914:13:33 IST Report Abuse
Karunanசபாநாயகர் எந்த முடிவும் எடுக்கலையே..நோட்டீஸ்த்தானே கொடுத்திருக்கிறார் ...அதை தடை செய்தால் அவர்கள் மொழியில் சொன்னால் NOT PROPER APPLICATION OF THE MIND...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
07-மே-201904:37:18 IST Report Abuse
meenakshisundaram சபாநாயகருக்கு 'ஆப்பு 'வைத்தேன் என்னும் ஸ்டாலினுக்கு தான் யாரை எதிர்க்கிறோம் என்றே தெரிய வில்லை ,அதே போல அறிந்தோ அறியாமலோ அவர் தான் தினகரனுக்கு 'கை தூக்கியாகிவிட்டததையும் அறிய வில்லை.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-மே-201902:45:14 IST Report Abuse
Cheran Perumal தினகரனுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக சொல்லி, இப்போது அவர்கள் எம் எல் ஏக்களின் பிரச்சினையையும் தானே கவனிக்கிறது திமுக. சசியை சிறைக்கு அனுப்ப காரணமான திமுக வுடன் கைகோர்ப்பதில் வெட்கமே இல்லாமல் செயல்படுகிறது அம்மமுக. ஆனால் ஆட்சி மாறியவுடன் தினகரன் ஸ்டாலினை வஞ்சம் தீர்ப்பார் என்று அவர்கள் கட்சியினர் சொல்கின்றனர். இதில் சபரிசனின் ராஜதந்திரம் எடுபடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X