பொது செய்தி

இந்தியா

'நீட்' எழுத முடியாத 500 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Updated : மே 06, 2019 | Added : மே 06, 2019 | கருத்துகள் (51)
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில், ரயில் தாமதத்தால் 'நீட்' தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' நேற்று(மே 5) நடந்தது. கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி நகரில் இருந்து மைசூரு செல்லும் ஹம்பி எக்ஸ்பிரஸ், தினமும் மாலை 6:20 மணிக்கு ஹூப்பள்ளியில் புறப்படும். மறுநாள் காலை 6:10 மணிக்கு, பெங்களூரை அடையும். இந்த ரயிலில், நேற்று முன்தினம் மாலை, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும், நேற்று நடந்த, 'நீட்' தேர்வுக்கு, பெங்களூரு கல்லுாரிகளில் மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை, 6:10 மணிக்கு, பெங்களூரு வர வேண்டிய ஹூப்ளி எக்ஸ்பிரஸ், மதியம், 2:30 மணிக்கு வந்தடைந்தது. ஆனால் நீட் தேர்வு மையத்தில், 1:30 மணிக்கே மாணவர்கள் ஆஜராகியிருக்க வேண்டும். அதனால், 500 மாணவர்களும், 'நீட்' தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். ரயிலில் வரும்போதே, சில மாணவர்கள், மத்திய அமைச்சர்கள் சிலருக்கு, 'டுவிட்டரில்' இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர்.

அதில், 'ரயில் மிக தாமதமாக வந்து கொண்டிருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில், தேர்வு மையத்தை அடைய முடியாது. அதனால், சிறப்பு அனுமதி அளித்து, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'கர்நாடகாவில், ரயில் தாமதம் காரணமாக, 'நீட்' தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்; அவர்களுக்கு, மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


அவரது டுவிட்டர் பதிவு:


Happy to announce that #Karnataka Students who missed #NEET exam , due to railway delay will get another chance.@MoHFW_INDIA @HRDMinistry @PIB_India @MIB_India @DG_NTA @cbseindia29 @ciet_ncert @DDNewsLive @airnewsalerts @DVSBJP@CMofKarnataka

— Chowkidar Prakash Javadekar (@PrakashJavdekar) May 6, 2019


Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
07-மே-201915:36:30 IST Report Abuse
Jaya Ram இதே தமிழ் நாடாயிருந்தால் அனுமதி தருவார்களா , போன தடவை தவறான கேள்வி கேட்டதற்கு மதிப்பெண் கேட்டதற்கு மறுத்தவர்கள் தானே இவர்கள் எல்லாமே அரசியல் தானப்பா
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-மே-201913:32:54 IST Report Abuse
ஜெயந்தன் இதுவே தமிழ் நாட்டில் நடந்திருந்தால்..இப்படி மறுவாய்ப்பு கொடுத்திருப்பார்களா??? மில்லியன் டாலர் கேள்வி ...........
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
07-மே-201910:49:49 IST Report Abuse
Needhiyin Pakkam Nil சென்ற ஆண்டு ஒரு கேரளா மாணவி ரயில் தாமதத்தால் 1 மணிநேரம் காலதாமதமாக வந்ததற்காக தேர்வு எழுத அனுமதி மறுப்பு அப்போது தேர்தல் நேரம் கிடையாது, ஆனால் இப்பொழுது தேர்தல் நேரம் என்பதால் உடனே அறிவிப்பு அந்த 500 மாணவர்களும் தப்பித்தனர் இல்லையென்றால் அதோகதி தான் அடுத்த ஆண்டு தான் தேர்வு எழுத முடியும்.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X