அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரம்

Added : மே 06, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரம்

கரூர் : அரவக்குறிச்சியில், முதல்வர், இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு முன், அ.தி.மு.க., பிரமுகர்களுடன், சர்ச்சை நாயகன் அன்புநாதன் உலா வந்தார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அன்புநாதன், 48; அ.தி.மு.க., பிரமுகர். 2016 மே மாதத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான பிரசாரம், உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது, அன்புநாதன் வீட்டில், 4.77 கோடி ரூபாய், குடோனில், 10 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாயை, வருமான வரி துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அன்புநாதனுக்கு சொந்தமான குடோனில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில், 'கவர்ன்மென்ட் ஆப் இந்தியா' என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தனர். அப்போதைய தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெகதீசன் புகாரின் படி, அரசின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக, அவர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பணம் பட்டுவாடா மற்றும் மதுபானம் வினியோகம் காரணமாக, அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பிறகு, அதே ஆண்டில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

அதன்பின், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அன்புநாதன் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், வரும், 19ம் தேதி, அரவக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முனதினம் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம் செய்தார்.முன்னதாக, பிரசார ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த, அ.தி.மு.க.,வினருடன், அன்புநாதன் வலம் வந்தார். முதல்வர் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், அமைச்சர் தங்கமணி, நாமக்கல், எம்.பி., சுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன், அவர் பேசிக் கொண்டிருந்தார். பிரசார இடத்துக்கு, முதல்வர் வரும் முன், அன்புநாதன் அங்கிருந்து சென்று விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Pandiarajan - tirupur,இந்தியா
07-மே-201908:39:34 IST Report Abuse
S.Pandiarajan அப்பா வயிறா இல்லை சுரங்கமா
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
07-மே-201912:24:14 IST Report Abuse
மணி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X