சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 06, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: வரும், 23ல், சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் நம் ஆட்சி தான்.

டவுட் தனபாலு: 'பொதுத்தேர்தலை சந்தித்து தான், ஆட்சி அமைக்கணும்னு, கருணாநிதி சொல்லி இருக்காரு... அதன்படியே நடப்போம்'னு, நேற்று வரைக்கும் தத்துவம் பேசி வந்தீங்க... இப்போ, வேறு மாதிரி கணக்குப் போட்டிருக்கீங்களே... கருணாநிதியின் அறிவுரைக்கு, அவ்வளவு தான் மரியாதையான்னு, 'டவுட்' வருதே...!

***

கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., - அ.ம.மு.க.,வை, மக்கள் சூரசம்ஹாரம் செய்வர். இத்தேர்தல், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கிறது.

டவுட் தனபாலு: தர்மம், அதர்மம் குறித்து, எல்லா அரசியல்வாதிகளும் தான் பேசுறாங்க... யார் பேசியது, தர்மம்கறது, 23ல் தெரிஞ்சிடப் போகுது... அதெல்லாம் சரி... இதே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பு மனுவில் இடம் பெற்றிருந்த, ஜெ., கைரேகையே போலின்னு, தீர்ப்பு வந்ததே... இதுல, நீதி, நேர்மை, தர்மம் குறித்தெல்லாம், நீங்க பேசுறது சரியா என்பது தான், மக்களின், 'டவுட்!'

***

இ.பி.எஸ்., முதல்வர்: சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என்ற தோல்வி பயம் வந்ததால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தி.மு.க.,வினர் கொண்டு வந்துள்ளார்.

டவுட் தனபாலு: நீங்க இப்படிச் சொல்றீங்க... இது, உண்மை என்றால், 'ஆட்சிக்கு ஆபத்து என்பதாலேயே, 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தனர்... இப்போதும், மூன்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர்'னு, எதிர்க்கட்சிகள் எழுப்பும், 'டவுட்'டையும் நம்பித்தானே ஆகணும்...!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-மே-201910:55:10 IST Report Abuse
D.Ambujavalli அம்மாவின் ஆத்மா வானிலிருந்து வழி நடத்துவது போல, 'அப்பா'வும் அவ்வப்பொழுது அறிவுரை கூறி, அவையைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கச் சொல்கிறாரோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-மே-201908:37:47 IST Report Abuse
Bhaskaran ஒரே ஆசை முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து தீருவதுதான்
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
08-மே-201908:11:09 IST Report Abuse
Abdul Rahmanஅந்த ஆசை வெறும் கனவாகவே முடியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X