புதுச்சேரி:தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும், 4 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதிகளிலும் தி.மு.க., அமோக வெற்றி பெறும். இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.இந்த சூழலில், எம்.எல்.ஏ., க்களை பதவி நீக்கம் செய்துவிட்டு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என, எடப்படி பழனிசாமி திட்டமிட்டார். அதன்படி, 3 எம்.எல். ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக் கும்போது, சபாநாயகர் இதுபோல் கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பது ஜனநாயக விரோத செயல். இதற்கு ஐகோர்ட் தடை விதித்திருக்கிறது. நீதிமன்றத்தில் கண்டிப்பாக மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கும் நீதி கிடைக்கும்.இதுபோல் கொல்லைப் புற வழியாக அல்லது விதிமுறைகளை மீறி எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்கம் செய்கிற வேலையை சபாநாயகர் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.