மோடி - ராகுல் லடாய் ஏன்?

Updated : மே 07, 2019 | Added : மே 07, 2019 | கருத்துகள் (120)
Share
Advertisement
புதுடில்லி: ராஜிவ் பற்றியும் அவரது ஆட்சிக் காலம் பற்றியும் மோடி கூறிய கருத்துகள், ராகுலையும் சோனியாவையும் அதிருப்தி அடைய வைத்துள்ளன.நடந்தது என்ன1986ல் ஸ்வீடன் நாட்டிடம் இரு்நது 400 போபர்ஸ் பீரங்கிகள் வாங்க அப்போதைய ராஜிவ் தலைமையிலான காங்., அரசு ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு அப்போதே ரூ.ஆயிரத்து 437 கோடி.இந்த ஒப்பந்தத்தில் ரூ.68 கோடி லஞ்சம் கைமாறியதாக 1987,
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, பா.ஜ., பாஜ, நரேந்திர மோடி, மோடி,  ராஜிவ், ராஜிவ் காந்தி

புதுடில்லி: ராஜிவ் பற்றியும் அவரது ஆட்சிக் காலம் பற்றியும் மோடி கூறிய கருத்துகள், ராகுலையும் சோனியாவையும் அதிருப்தி அடைய வைத்துள்ளன.


நடந்தது என்ன


1986ல் ஸ்வீடன் நாட்டிடம் இரு்நது 400 போபர்ஸ் பீரங்கிகள் வாங்க அப்போதைய ராஜிவ் தலைமையிலான காங்., அரசு ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு அப்போதே ரூ.ஆயிரத்து 437 கோடி.இந்த ஒப்பந்தத்தில் ரூ.68 கோடி லஞ்சம் கைமாறியதாக 1987, ஏப்.16ம் தேதி ஸ்வீடன் ரேடியோ செய்தி வெளியிட்டது. இதையடுத்து 1990ம் ஆண்டு ஜன.22ம் தேதி சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இடைத்தரகர்களாக வின் சத்தா, இந்துஜா சகோதரர்கள், ராஜிவுக்கு நெருக்கமான இத்தாலிய வர்த்தகர் ஒட்டாவியோ குட்ரோச்சி இருந்ததாக புகார் எழுந்தது.1991ல் கொலை செய்யப்பட்ட ராஜிவ், போபர்ஸ் வழக்கில் குற்றமற்றவராக டில்லி ஐகோர்ட்டால் அறிவிக்கப்பட்டார்.


latest tamil news

மோடிக்கு கோபம் ஏன்


கடந்த ஒரு ஆண்டாக மோடியை காவலாளி திருடன் என்று காங்., விமர்சனம் செய்து வருகிறது. இதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த மோடி, மே 4ம் தேதி ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‛‛உங்கள் (ராகுல்) தந்தையை (ராஜிவ்) கை சுத்தமானவர் என்று உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் கூறினர். ஆனால் அவரது வாழ்க்கை ஊழல்வாதி நம்பர் 1 ஆக முடிந்துவிட்டது. அடுத்த கட்ட தேர்தல்களில் உங்கள் தந்தையின் (ராஜிவ்) பெயரைச் சொல்லி ஒட்டு கேட்க முடியுமா'' என்று சவால் விடுத்தார்.
இதற்கு பல காங்., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மோடி, ‛‛அவரைப் (ராஜிவ்) பற்றி ஒரு வார்த்தை சொன்னதற்கே உங்களுக்கு தேள் கொட்டியது மாதிரி இருக்கிறதே'' என்றார்.

மோடிக்கு நெருக்கமானவர்கள் இது பற்றி கூறும்போது, ‛‛மோடியை திருடன் என்று ராகுல் தொடர்ந்து கூறி வருவது மோடியை காயப்படுத்தி விட்டது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மோடி தான் காரணம் என்று உலகமே சொல்லும்போது மோடியின் நேர்மை பற்றி ராகுல் கேள்வி கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதனாலேயே சோனியாவின் கணவரும், ராகுல், பிரியங்காவின் தந்தையுமான ராஜிவ் பற்றி பேசி ராகுலை திருப்பித் தாக்க துவங்கினார் மோடி'' என்கின்றனர்.


latest tamil news
மோடியின் தேர்தல் கணிப்பு


இதுவரை தேர்தல் முடிந்துள்ள 425 தொகுதிகள் பற்றி மோடி கணித்துள்ளார். ஜாதி ரீதியாக எப்படி ஓட்டு விழுந்திருக்கும், முஸ்லிம்கள் எப்படி ஓட்டளித்திருப்பர், உ.பி.,யில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணிக்கு ஆதரவு கிடைத்திருக்குமா என்று அவர் ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இதில் முன், பின் வித்தியாசம் இருக்கலாம். இருப்பினும் எதிர்க்கட்சிகள் மீது எப்படியெல்லாம் அழுத்தம் கொடுக்கலாம் என்பதை மோடி நன்கறிவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
11-மே-201908:19:47 IST Report Abuse
B.s. Pillai Jetair is getting closed because of their own policies and functioning. Tata Docomo closed its activities before Modi Govt., because I was a connection in my house and could not get it activated after a few months gap of absence from India. BSNL is loss making company from congress govt time only, but the income from Bombay Telephones and Delhi Telephones was taking it to surplus Profit making Govt organisations.But all other private companies conspire together with support from congress to grant licences to private telecom companies and denying allotment of frequency spectrums to MTNL and BSNL and demanding funds as if they are private owned companies. The Modi govt has enacted law that if the loan is not repaid, then the Govt would initiate bankruptcy against that company. So Essar group, Reliance etc were ready to sell their properties to pay back the bank loan. The Congress Govt allotted Godavari base to Reliance to explore oil and sell that oil in India, but he is exporting it under their own eyes and closed all petrol bunks in India stating it did not get sufficient oil. Now ONGC has filed court case that Reliance has stolenmillions of barrels oil from ONGC BASE adjacent to its allotted base . The Congress Govt maintained silence at that time. Coal allotment scam, Commonwealth games scam, 2G scam and so many known and unknown scams, the public is now totally hating this present congress. P.Chidambaram and his son has millions of $$$$ worth properties and funds all over the world. When anyone Govt servant retires, he was not even getting 10 Lakhs in his hands for his/her service through out life . But these corrupt MPs and MLAs worth billions of funds and properties and even govt. Pension for life. All this must change. If any MP/MLA is punished by Court for corruption or amassing of wealth, his Pension should automatically be stopped.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
10-மே-201908:07:09 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ராகுல் தான் வீண் வம்புக்கிழுக்குறாங்க இது உலகறிஞ்சஉண்மை மோடிகாந்துக்காமல் போனாலும் நோண்டினந்த இருந்தகா பிள்ளைப்பூச்சியைவ=இடவா கேவலம் நம்ம பீ எம் ,திருப்பித்தான்க்கினால் மோடிபொல்லாதவரா ??????நேத்துமுளைச்ச காளான் பிரியங்க அவ சொல்றா அவரை துரியோதனன் என்று நாங்கள் சொல்றோம் இவை ரெண்டுமே தான் கேவலமான தாடகை அண்ட் ராவணன் என்று சும்மாயிருக்குங்களா இடதுகளும் இதுகளைப்பெற்ற அன்னையும் காங்கிரஸ் வாலாக்கள் என்ற சொம்புகளும் கொம்பில்லாத அரக்கர்கூட்டம் என்றும் கூறுவோம் எவண்டா ஒழுங்கு கொள்ளையடிக்காதகோடீஸ்வரனுக்கள் எவ்ளோ பேருங்க சோனியாக்கு ராகுலுக்கு பிரியங்க வாதிராவுக்கெல்லாம் எங்கேருந்து இவ்ளோ கொடிகள் குவிஞ்சது தெண்ணீயை தாக்கினால் கொட்டும் அவதிப்படணும் இதுவரை சுசுவாமியாவது சோனியா ராகுல் பத்தியெல்லாம் சொல்லிருக்காங்க ஆனால் மோடி ஒன்னும் சொல்லல்லீங்க அவர் பதவியை மதிக்காமல் சொற் என்று சொல்லலாமா
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
08-மே-201920:17:38 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஒருவேளை ராஜீவ் அவர்கள் கொலை செய்யப்படவில்லையெனில், அவர் குற்றவாளிதான் என்ற தீர்ப்பு வந்திருக்கும். நமது நாட்டின் பிரதமந்திரியை திருடன் என்று சொல்லக்கூடிய தைரியம் யார் கொடுத்தது. சிதம்பரத்தையும் ராசாவையும் கனிமொழியையும் லாலுவையும் சிட்பண்ட் தீதியையும் திருடர்கள் கூட்டம் என்று சொல்ல துணிவில்லாத அவர்களின் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் காங்கிரஸின் தலைவர் .. என்ன வெட்க கேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X