புதுடில்லி: திப்பு சுல்தானை நினைவு கூர்ந்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் புகழ்ந்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: ''மே 4 ஆம் தேதி, திப்பு சுல்தானின் இறந்த தினம். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருப்பதற்கு காரணம், அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரம் மேலானது என்று கருதி போராடி மரணம் அடைந்தவர்" எனக்கூறியிருந்தார்.
Today 4th May is the death anniversary of Tipu Sultan - a man I admire because he preferred freedom and died fighting for it rather than live a life of enslavement.
— Imran Khan (@ImranKhanPTI) May 4, 2019
முதல்முறையல்ல
திப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ்வது முதல்முறை அல்ல. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பின் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இது குறித்து ஆலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்ட பாக்., பார்லிமென்ட் கூட்டத்தில் திப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ்ந்து பேசியிருந்தார்.

ஏமாற்றம்
இம்ரான் கருத்து தொடர்பாக காங்., தலைவர் சசி தரூர் வெளியிட்ட அறிக்கை: '' இம்ரான் கான் பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்திய துணை கண்டத்தின் வரலாறு மீது அவருக்கு ஆர்வம் உண்டு. அவர் படிப்பார், அக்கறை கொள்வார். ஆனால் சிறந்த இந்திய ஹீரோ ஒருவரை அவரது மறைந்த தினத்தன்று பாகிஸ்தான் தலைவர் நினைவு கொள்வது ஏமாற்றம்தான் எனக்கூறியிருந்தார்.

One thing i personally know about @imranKhanPTI is that his interest in the shared history of the Indian subcontinent is genuine & far-reaching. He read; he cares. It is disappointing, though, that it took a Pakistani leader to remember a great Indian hero on his punyathithi. https://t.co/kWIySEQcJM
— Shashi Tharoor (@ShashiTharoor) May 6, 2019
கண்டனம்
இதனை தொடர்ந்து, சசி தரூருக்கு பா.ஜ., எம்.பி., சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இம்ரான் கானை கட்டிப்பிடிப்பதற்கு சித்தராமையாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், ராகுல் மற்றும் பிரியங்காவிடம் நல்ல பெயரை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE