பிரதமர் மோடியை தாக்கிய பிரியங்கா; அமித்ஷா பதிலடி

Updated : மே 07, 2019 | Added : மே 07, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: துரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம் என முன்னாள் பிரதமர் ராஜீவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு, பிரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், பிரசாரம் ஒன்றில், பிரதமர் மோடி

புதுடில்லி: துரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம் என முன்னாள் பிரதமர் ராஜீவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு, பிரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.latest tamil news
லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், பிரசாரம் ஒன்றில், பிரதமர் மோடி பேசுகையில், மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார் என பேசியிருந்தார். இதற்கு காங்., மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news
துரியோதனுடன் ஒப்பீடு:


இந்நிலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: பிரதமர் மோடிக்கு வேறு பிரச்னை கிடைக்காததால் எனது குடும்பத்தை அவமதித்துள்ளார். இந்த நாடு ஆணவம் கொண்டவர்களை என்றும் மன்னிக்காது. வரலாற்றில் இதற்கு உதாரணம் உள்ளது.


latest tamil news
மகாபாரத்தில் துரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம். துரியோதனனிடம் கிருஷ்ண பகவான் பேச முயற்சித்த போது, ஆணவ குணம் கொண்ட துரியோதனன், கிருஷ்ணரை சிறை பிடிக்க முயற்சித்தான். அந்த ஆணவ குணம் தான் பிரதமர் மோடியிடமும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


அமித் ஷா பதிலடி:latest tamil newsஇதற்கு பதிலடி தரும் வகையில், மேற்கு வங்க மாநிலம் பிஷ்னாபூரில் நடந்த பிரசாரத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், 'பிரதமர் மோடியை துரியோதனன் என பிரியங்கா அழைக்கிறார். நமது ஜனநாயக நாட்டில் நீங்கள் ஒருவரை துரியோதனன் என அழைத்தால், அவர் துரியோதனன் ஆகி விட மாட்டார். மே 23ம் தேதி துரியோதனன் யார்; அர்ஜூனன் யார் என்பது தெரிந்துவிடும்.' இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-மே-201904:05:58 IST Report Abuse
J.V. Iyer அப்ப காங்கிரஸ் அழிந்ததற்கு யார் காரணம்? பிரியங்கா கணவர் இவ்வளவு சொத்து சேர்த்ததற்கு யார் காரணம்? இவ்வளவு ஆணவமாக இவர்கள் பேசுவதற்கு யார் காரணம்? பிரியங்கா வாத்ரா வின்சி காந்தி கூனி, சகுனியாக மாற யார் காரணம்?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
10-மே-201917:04:54 IST Report Abuse
Endrum Indian இங்கே பாரு எல்.கே.ஜி. குழந்தாய் நீ குரானிலிருந்து சொல் , பைபிளிலிருந்து சொல் ஏற்றுக்கொள்கின்றோம் நீ பாட்டுக்கும் மஹாபாரதம் , ராமாயணம் எல்லாம் சொல்லாதே உனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
10-மே-201914:13:04 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நெருக்கும் கர்வம் அதிகம் உண்டே அவர்பொண்ணுக்கும் உண்டு ராஜிவ் பத்தி தெரியலே சோனியாவோ அஹம்பாவத்தின் மொத்த உருவம் ராகுலுக்கு ம் இருக்கு தான் என்னவோ பெரிய ராஜா வமிசம் என்று இதுக்கு பேச்சிலேயே கர்வம் பொங்கிவழியுதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X