அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: தேனியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

Updated : மே 07, 2019 | Added : மே 07, 2019 | கருத்துகள் (20)
Advertisement
தேனி, வாக்குப்பதிவு ,தேர்தல் அதிகாரி, போராட்டம், தாசில்தார்

தேனி: கோவையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள், தேனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.






தேனி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், கம்மாவார் பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் இருந்து லாரியில் பயன்படுத்தப்படாத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தது. இது, அங்கிருந்த, பயன்படுத்தப்படாத இயந்திரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனையறிந்த தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தேனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர்கள், அதனை திறந்து காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, அந்த இயந்திரங்களை பார்க்க எதிர்க்கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், ஒரு வேளை மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக தேனி, ஈரோட்டிற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவது வழக்கமான நடவடிக்கை. தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்கள் , தேர்தலில் பயன்படுத்தப்படாத இயந்திரங்கள். வாக்குப்பதிவான இயந்திரங்களை மாற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அவ்வாறு யாரும் செய்ய முடியாது. பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் பத்திரமாக உள்ளது. என்றார்.








Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி ஓட்டு போடப்பட்ட இயந்திரங்கள் வைக்கபட்டுள்ளது தேனி பொறியியல் கல்லூரியில். ஓட்டுப் போடாத புதிய இயந்திரங்கள் தேனி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளது. அதை எப்படி என்றோ அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் அவர்களது கையொப்பங்ளுடன் சீலிட்ட எந்திரத்தை எப்படி மாற்ற முடியும். வெளிப்படையாக நடத்தப்படும் தேர்தல் கமிஷனின் ஒவ்வொரு செயலிலும் எப்படி இவர்களுக்கு மட்டும் தில்லுமுல்லு வேலை செய்ய முடியும் என்று பழி சுமத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவம் கேசரிவால் முன்பு ஈவீஎம் மெஷின்களைப் பற்றிய புகார் போன்றது. உண்மையில்லை. தோல்வி பயம் தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
08-மே-201910:56:57 IST Report Abuse
kandhan. தேர்தல் கமிஷனின் வேலைகளை மக்கள் உன்னிப்பாக பார்க்கிறார்கள் விளைவு ??????? கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-மே-201909:34:07 IST Report Abuse
D.Ambujavalli நம்பும்படியாகவா இருக்கிறது? முக்கிய ஆணையம் மறுதேர்தல் அறிவித்தால் மாரு நாளே நடந்துவிடுமா? தற்போது நடந்து முடிந்த தேர்தலில் யந்திரங்களை ஒரு மாதம் முன்பே கொண்டு வைத்தார்களா? எதிர்க்கட்சிகள் இவ்வளவு எதிர்க்கும்போது ஒன்று செய்யலாமே வந்துள்ள யந்திரங்களை ஒரு நீதிபதி முன்பு உபயோகித்துப்பார்த்து வாக்களிக்கப்பட்டதா என்று உறுதி செய்து விட்டால் சந்தேகம் தீர்ந்துவிடுமே அதற்கு முன்வராதவரையில் பிரசினை தீராது வாரணாசி யாத்திரையில் 'எப்படியாவது' மகனை ஜெயிக்க வைக்கும் இந்த உபாயத்தையும் 'குரு' சொல்லிக்கொடுத்திருப்பாராக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X