ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: தேனியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: தேனியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

Updated : மே 07, 2019 | Added : மே 07, 2019 | கருத்துகள் (20)
தேனி, வாக்குப்பதிவு ,தேர்தல் அதிகாரி, போராட்டம், தாசில்தார்

தேனி: கோவையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள், தேனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.






தேனி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், கம்மாவார் பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் இருந்து லாரியில் பயன்படுத்தப்படாத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தது. இது, அங்கிருந்த, பயன்படுத்தப்படாத இயந்திரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனையறிந்த தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தேனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர்கள், அதனை திறந்து காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, அந்த இயந்திரங்களை பார்க்க எதிர்க்கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், ஒரு வேளை மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக தேனி, ஈரோட்டிற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவது வழக்கமான நடவடிக்கை. தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்கள் , தேர்தலில் பயன்படுத்தப்படாத இயந்திரங்கள். வாக்குப்பதிவான இயந்திரங்களை மாற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அவ்வாறு யாரும் செய்ய முடியாது. பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் பத்திரமாக உள்ளது. என்றார்.








Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X