கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மார்ட்டின் கேஷியர் மரணம்: ரூ. 3 கோடி பேரம் பேசினாரா போலீஸ் அதிகாரி?

Updated : மே 08, 2019 | Added : மே 07, 2019 | கருத்துகள் (28)
Advertisement
மார்ட்டின், கேஷியர், மரணம்,  பேரம், போலீஸ் அதிகாரி

கோவை: மர்மான முறையில் உயிரிழந்த, மார்ட்டின் நிறுவன கேஷியர் பழனிசாமியின் மனைவியிடம், போலீஸ் அதிகாரி ஒருவர் மூன்று கோடி ரூபாய் பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, கோவை மாவட்ட எஸ்.பி.,க்கு, மேற்கு மண்டல ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் நாடு முழுவதும் வருமானவரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, மார்ட்டின் நிறுவன கேஷியர் கோவை, உருமாண்டாம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி, 45, மர்மமான முறையில் வெள்ளியங்காடு குளத்தில் பிணமாக மிதந்தார். வருமானவரி அதிகாரிகள் எனக்கூறி வீட்டிற்கு வந்த நபர்கள் தாக்கியதாக, குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேக மரணம், தற்கொலைக்கு துாண்டல் சட்டப்பிரிவுகளில், காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பழனிசாமி சடலம் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட நிலையில், பிரேதத்தை பெற குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.

பழனிசாமி மனைவி சாந்தாமணி நிருபர்களிடம் கூறுகையில், ''எனது கணவர் தற்கொலை செய்யவில்லை; அடித்துக்கொன்றுவிட்டனர். கணவரை காணவில்லை என்று மார்ட்டின் அலுவலகம் சென்று கேட்டபோது உரிய பதில் இல்லை. கணவர் மரணத்துக்கு மார்ட்டின் நிர்வாகமும், வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி வீட்டிற்கு வந்தவர்கள் தான் காரணம்.மார்ட்டின் நிறுவன சொத்துக்கள் குறித்த தகவல்களை, வருமான வரித்துறை விசாரணையில் கணவர் தெரிவித்துள்ளார். அதனால், அவரை மார்ட்டின் ஆட்கள் அடித்து கொலை செய்துவிட்டனர். எங்களை போலீஸ் அதிகாரி ஒருவர் மிரட்டுகிறார்; மூன்று கோடி ரூபாய் பேரம் பேசினார். ஐ.ஜி.,யிடம் புகார் அளித்துள்ளோம். கணவர் இறந்தபின் மார்ட்டின் அல்லது அவரது மனைவி லீமாரோஸ் எங்களை சந்தித்து ஆறுதல்கூறவில்லை. அவர்களின் டிரைவர் மூலமாக, எங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுக்க துாண்டிவிட்டனர்,'' என்றார்.


இந்த விவகாரத்தில் முதலில் வருமான வரித்துறை, அதன்பின் மார்ட்டின் நிறுவன உரிமையாளர்கள், அப்புறம் போலீஸ் என, மாறிமாறி பழனிசாமி குடும்பத்தினர், ஊடகங்களின் முன் குற்றம்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். அதில் ஒரு புதிய புகார்தான், கோவை, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.,மணி, பிரச்னையை முடிக்க, தங்களிடம் மூன்று கோடி ரூபாய் பேரம் நடத்தினார் என்பது.இப்புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க,தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, கோவை எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'சிலரிடம் பணம் பறிக்கும் நோக்கில், பழனிசாமி குடும்பத்தினரை பின்னாளிலிருந்து சிலர் இயக்குகின்றனர். அவர்களின் பின்னணி குறித்தும் விசாரித்து வருகிறோம்' என்றார்.


பினாமி சொத்துக்களை அபகரிக்க திட்டம்?

லாட்டரி அதிபர் மார்ட்டின் தனக்கு பல ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த ஊழியர்கள் சிலரின் பெயரில் பினாமியாக சொத்துக்களை வாங்கிப்போட்டுள்ளதாகவும், அதன்படி கேஷியர் பழனிசாமி, 25 ஆண்டுகளாக மார்ட்டின் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளதால், அவர் பெயரிலும் பினாமி சொத்துக்கள் இருக்கலாம் என்றும், அவரது இறப்புக்குப்பின் பினாமி சொத்துக்களுக்கு உரிமை கோரி சம்பந்தப்பட்டவர்கள் வந்துவிடக்கூடாது என்பதாலும், பழனிசாமி குடும்பத்தினர் சிலரது உதவியுடன் பிரச்னையை பெரிதாக்கி வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இவ்விவகாரத்தை வருமானவரித்துறை உற்று கவனித்து வருவதால் அடுத்த அதிரடியில் அவர்கள் இறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


மகன் வழக்கு

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின், கேஷியர் மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றக்கோரி, அவரது மகன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில், கேஷியராக பணியாற்றி வந்தார்.மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கேஷியர் பழனிசாமியிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், காரமடை, வெள்ளியங்காடு அருகேயுள்ள குளத்தில், பழனிசாமி பிணமாக கிடந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, காரமடை போலீசில், பழனிசாமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.


இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், பழனிசாமியின் மகன், ரோகின்குமார் தாக்கல் செய்த மனு: வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, என் தந்தை பழனிசாமியை, வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரித்தனர். ஏப்ரல், 30 இரவில் இருந்து, மறுநாள் அதிகாலை, 4:00 மணி வரை துாங்க விடாமல் சித்ரவதை செய்துள்ளனர். பின், மார்ட்டின் அலுவலகத்திற்கும் கூட்டி சென்று, அங்கும் சித்ரவதை செய்துள்ளனர். விசாரணைக்காக, மே, 3ம் தேதி காலை வீட்டை விட்டு சென்றார். அலுவலகம் வரவில்லை என, ஊழியர் ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.

உடனே, தந்தையை தேடினேன். காரமடை போலீஸ் நிலையத்தில் இருப்பதாக, மார்ட்டினின் வழக்கறிஞர் தெரிவித்தார். போலீஸ் நிலையத்தில், வலுக்கட்டாயமாக என்னிடம் கையெழுத்து பெற்றனர். என் தந்தை, தற்கொலை செய்து கொண்டதாக, அதில் குறிப்பிட்டிருந்தனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று, தந்தையின் உடலை பார்த்தேன். முகத்திலும், தலையிலும், ரத்தக் காயங்கள் இருந்தன. இது, ஒரு கொலை.

மார்ட்டின் நிறுவன வளாகத்துக்குள், என் தந்தையை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். உடலை, தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் வீசியுள்ளனர். தண்ணீரில் மூழ்கி, அவர் இறக்கவில்லை. உடலில் தெரியும்படியான ரத்தக் காயங்கள் இருந்தன. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றவும், மீண்டும், பிரேத பரிசோதனை நடத்தவும் கோரினேன். மனு, நிலுவையில் உள்ளது. பிரேத பரிசோதனையின் போது, நாங்கள் தேர்வு செய்யும் டாக்டர் இருக்க வேண்டும். வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
08-மே-201908:33:37 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி ஓரு கிருஸ்தவ மார்டின் மகன் எப்படி பிஜேபியில் இருக்க முடியும்.......... தமிழக விஞ்ஞான ஊழல் குடும்பத்தின் அடுத்த சாதிக் பாட்சா இந்த பழனிச்சாமி............ பூச்சிமருந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள அதிக கூலி கொடுக்கப்பட்டுள்ளதா?.......சில நாட்களுக்கு மட்டுமே உடனே வாய்ப்பு.........நீதி தேவதை ஆடும்போது..........உங்க ஆட்டம் முடிவு பெறும்......
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
08-மே-201910:40:45 IST Report Abuse
JIVANAlphons Joseph Kannanthanam யாருன்னு தெரியுமா மூடர் கூட்டத்திற்கு இல்ல அதுவும் ஓரு கிருஸ்தவன் எப்படி பிஜேபியின் மத்திய மந்திரியாக இருக்க முடியும்னு கேப்பியா.............
Rate this:
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
08-மே-201911:53:42 IST Report Abuse
pattikkaattaan கேரளாவிலிருந்து ஒரு கிருத்துவர் பிஜேபி மத்திய அமைச்சராக இருக்கிறாரே .. பிஜேபி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி...
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
08-மே-201913:35:36 IST Report Abuse
BoochiMarunthuரொம்ப முத்திடிச்சு போல . கீழே படிச்சு பாரு...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-மே-201908:21:46 IST Report Abuse
தமிழ்வேல் எல்லாத்துக்கும், 23 தேதியை தாண்டனும்.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
08-மே-201907:57:09 IST Report Abuse
mohan எல்லாம் பணம்.. நீதி ஜெயிக்க வாய்ப்பில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X