சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 07, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., பொருளாளர் துரைமுருகன்: தேர்தல் களத்தில், மோடிக்கு போட்டியாக, ராகுலை பிரதமர் வேட்பாளராக உருவாக்கிய பெருமை, ஸ்டாலினுக்கு உண்டு. மோடியா, ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு காரணமே, ஸ்டாலின் தான். அவரது இந்த ஆளுமை தான், தி.மு.க.,வின் பலம்.

டவுட் தனபாலு: ஸ்டாலின் முன்மொழிந்ததை, கூட்டணிக் கட்சிகள் ஏற்காமல் இருப்பது, ரெண்டாவது... சம்பந்தப்பட்ட ராகுலே, இதைப் பத்தி மூச்சுவிட மாட்டேங்குறாரே... இதுல என்ன பெருமையும், ஆளுமையும் இருக்குங்கற, 'டவுட்' வந்திடாதா...!

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சியில், வெளிப்படையான நிர்வாகம் இருக்கும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தீர்வு காணப்படும்.

டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில், எப்போதும் வெளிப்படையான நிர்வாகம் இருக்குமா... இல்லை, இனி வரும் ஆட்சியில் தான், முதல்முறையாக அதை அரங்கேற்றப் போறீங்களா... இந்த, 'டவுட்'டை விளக்கினால் தானே, வீடு, வாசல், நிலம், புலம் வைத்திருக்கும் மக்களுக்கு பல்வேறு, 'டவுட்'கள் தீரும்...!

***

தமிழக காங்., தலைவர் அழகிரி: மறைந்த பிரதமர் ராஜிவ் மீது, தொடுக்கப்பட்ட போபர்ஸ் ஊழலில், போதுமான ஆதாரம் இல்லை என, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவரை ஊழல்வாதி என, பிரதமர் மோடி பேசி வருவது, கண்டிக்கத்தக்கது.

டவுட் தனபாலு: ரபேல் விவகாரத்தில், இதே குற்றச்சாட்டை, மோடி மீது ராகுல் சொன்னாரு... அவர், சட்டரீதியாக எதிர்கொண்டதும், நீதிமன்றத்தில் ராகுல் வருத்தம் தெரிவித்தாரு... ராஜிவ் மீது தவறில்லை என்றால், பிரதமருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே... ஏன், வாய்ப் பேச்சோடு நிற்குறீங்க... இதுதானே, 'டவுட்'டை வலுப்படுத்துது...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X