மோடி, உங்கள் நேரம் முடிந்து விட்டது : ராகுல் டுவீட்

Updated : மே 08, 2019 | Added : மே 08, 2019 | கருத்துகள் (100)
Advertisement

புதுடில்லி : மோடி, உங்களின் நேரம் முடிந்து விட்டது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.





ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது என, காங்கிரஸ் தலைவர் ராகுல் சொன்னார். கோர்ட் அப்படி சொல்லவே இல்லை என பா.ஜ. எம்.பி. மீனாட்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டதும் ராகுல் வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை; எங்கே மன்னிப்பு? என நீதிபதிகள் கேட்டதும் ராகுல் பணிந்தார். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக, புதனன்று புதிய பிரமாண பத்திரத்தை ராகுல் தாக்கல் செய்தார்.



பிரதமர் மோடியை திருடன் என குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ., சார்பில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசிற்கு பலமுறை ஆஜராகி மன்னிப்பு கேட்டார் ராகுல். இந்நிலையில் கோர்ட் அறிவுறுத்தலின் பேரில், இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.






நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ராகுல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். அதில், நியாய்.,க்காக அதிக அளவிலான இளம் வாக்காளர்கள் மட்டுமல்ல நாடு முழுவதிலும் அனுபவம் வாய்ந்த முதியவர்களும் அந்த திட்டத்தின் ஆற்றலை புரிந்து கொண்டு ஓட்டளித்துள்ளனர். மோடி அவர்களே, உங்களின் நேரம் முடிந்து விட்டது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
09-மே-201905:25:56 IST Report Abuse
Mahesh அதிருக்கட்டும், உங்கள் நேரம் வரவே வராது
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-மே-201904:01:14 IST Report Abuse
J.V. Iyer கேவல பேச்சின் உச்சம் இந்த ராகுல் கைப்புள்ளை. அவர் சுயநினைவில்தான் பேசுகிறாரார என்று ஆச்சர்யமாக உள்ளது. உள்ளே இருப்பது தானே வாயில் வரும் உலகில் யாரை வேண்டுமானாலும் திருத்தலாம், கைப்புள்ளையை தவிர.. கைப்புள்ளை கனவிலும் பிரதமராகமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
09-மே-201900:21:33 IST Report Abuse
swami ragul ivan 2001 & 2006 varushatiya case ennha aachi ?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X