சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 08, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., முதல்வர்: ஜெ., உடல் நலம் குன்றி, நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததற்கு, தி.மு.க., தொடுத்த பொய் வழக்கு தான் காரணம்.

டவுட் தனபாலு: இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு... அப்புறம் எதற்குங்க, விசாரணை கமிஷன் எல்லாம் வைத்தீங்க... ஆமா, சொத்து குவிப்பு வழக்கு பொய் என்றால், அதில், ஏ2வாக சேர்க்கப்பட்ட சசிகலாகவும், உங்க பார்வையில் நிரபாராதி தானோ என்ற, 'டவுட்' வருதே... இதைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

***

அ.ம.மு.க., துணை பொது செயலர், தினகரன்: மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், பதவிக்காக ஆசைப்படுபவன் அல்ல.

டவுட் தனபாலு: அப்புறம் ஏன், ஆர்.கே.நகரில் போட்டி இட்டீங்க... சசிகலா பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்து, அவருக்கு, கல்தா கொடுத்து, பொது செயலரானீங்க... எனக்கு பதவி ஆசை இல்லை எனச் சொல்வதைக் காட்டிலும், என்னை நம்பி வருவோருக்கு, பதவி ஆசை இருக்கக் கூடாதுன்னு சொன்னால் தான், சரியாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே வேண்டாம்...!

***

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளதால், ராகுல், பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டவுட் தனபாலு: இவ்வளவு காலம், எம்.பி.,யாக இருந்த, அமேதி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற முடியுமா என்ற, 'டவுட்'டில் தான், வயநாட்டிலும் ராகுல் போட்டியிடுறாரு... இந்த நிலையில், பிரதமராகும் வாய்ப்பு குறித்தெல்லாம் பேசுறது, உங்களுக்கே காமெடியாத் தெரியலையா...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X