பதிவு செய்த நாள் :
ஊழல்வாதிகளுக்கு சிறை
பிரதமர் மோடி உறுதி

பதேஹாபாத்: ''நடந்து முடிந்த ஐந்து கட்ட தேர்தலில், தோல்வி உறுதி என தெரிந்து விட்டதால், எதிர்க்கட்சிகள் போட்டியில் இருந்து விலகி விட்டன,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Modi,PM,பிரதமர்,மோடி,ஊழல்வாதி,சிறை,உறுதிஹரியானாவில், பதேஹாபாத் மற்றும் குருஷேத்ரா லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, மோடி பேசியதாவது: கடந்த, 2014ல், மக்கள் ஆதரவுடன் மத்தியில் அமைந்த, பா.ஜ., அரசு, ஐந்து ஆண்டுகளில், உலகளவில், இந்தியாவின் நன்மதிப்பை பெருமளவு உயர்த்தியுள்ளது. தற்போது, ஐந்து கட்ட தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் மற்றும் 'மெகா' கூட்டணி கட்சிகளின் ஆரவார கூச்சல் அடங்கி விட்டது; அவை, போட்டியில் இருந்து விலகி விட்டன. மத்தியில், கூட்டணி சேர்ந்தோ அல்லது தனியாகவோ அரசு அமைக்கலாம் என்ற, காங்கிரஸ் கட்சியின் கனவு தகர்ந்து விட்டது.


நாட்டு மக்கள் ஆசி:தற்போது, நிலவரம் தெளிவாக உள்ளது. வரும், 23ம் தேதி மாலை, தேர்தல் முடிவுகள்

வெளியான பின், நாட்டு மக்கள் ஆசியுடன், மீண்டும் என் அரசு அமையும். கடந்த, 1984ல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நடந்த வன்முறையில், 3,000த்திற்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர், வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த வன்முறைக்கு வித்திட்டவரை தண்டிப்பதற்கு பதிலாக, அவரை, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் மூலம், ஒரு மாநிலத்தின் முதல்வராக அமர வைத்து, அழகு பார்த்தது காங்கிரஸ்.


ஆனால், பா.ஜ., அரசு, சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமானோர் மீதான நடவடிக்கையை, ஏற்கனவே துவக்கி விட்டது. காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலையும், ஊழலையும், நான் தடுத்தேன். அவர்கள் அன்பு என்ற முகமூடி அணிந்து, என்னை தகாத வார்த்தைகளால் வசைபாடுகின்றனர். ஹிட்லர், முசோலினி, தாவூத் இப்ராஹிம் என்றெல்லாம் என்னை வசை பாடினர். அவர்களின் அன்பு அகராதியில் உள்ள சொற்களை, இங்கு சொல்கிறேன்.


வசைமொழிகள்:என்னை, பூச்சி என்றார் ஒருவர்; இன்னொருவர், வெறி நாய் என்றும், மற்றொருவர், பஸ்மாசூரன் என்றும் கூறினர். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஒருவர், என்னை, குரங்கு என்றார். என் தாயையும் பழித்தனர்; என் தந்தை யாரென்று கூட கேட்டனர். இவை எல்லாமே, நான் பிரதமரான பின், காங்கிரஸ்காரர்கள் கூறிய வசைமொழிகள்.

Advertisementஹரியானாவில், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்த, சோனியா மருமகன், ராபர்ட் வாத்ரா, இப்போது, அமலாக்கத் துறை விசாரணைக்கும், ஜாமின் பெறவும், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். தன்னை, ராஜாதி ராஜாவாக கருதி வந்த அவர், நடுக்கத்தில் உள்ளார். அவரை சிறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துவிட்டேன். உங்கள் ஆசியுடன், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள், அவரை சிறையில் தள்ளுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, பா.ஜ., அரசு, எனக்கு பல வகையிலும் கடுமையான தொல்லைகளை கொடுத்தது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். என் மீது, எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் சுய அதிகாரம் போன்ற பல பிரச்னைகள் இருக்க, அதைப் பற்றி பேசாமல், என்னை தனிப்பட்ட முறையில், மோடி மீண்டும் தாக்கிப் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., அரசின் தோல்வியை மறைக்க, என்னை இழுக்கிறார். தனிப்பட்ட விமர்சனம் செய்ய வேண்டாம்.

-ராபர்ட் வாத்ரா, பிரியங்காவின் கணவர்Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
11-மே-201909:25:59 IST Report Abuse

truth tofdayமுன்பு ஓம் Prakash சொஉடல, Yadav சசி காலா ஜெயிலுக்கு போகவில்லையா இவர் மட்டும் தான் நாட்டுக்காக உழைக்கிறார் தேசபக்க்தர் என்று சொல்வது போலுள்ளது

Rate this:
Thulasingam Jayaram Pillai - Chennai,இந்தியா
09-மே-201922:20:50 IST Report Abuse

Thulasingam Jayaram Pillaiஇந்த 5 ஆண்டுகள் இவர் செய்து கொண்டிருந்தார்? அதை போலவே இப்போதும் செய்வார் என்றே நம்புவோம்.

Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
09-மே-201916:42:27 IST Report Abuse

Ab Cdராகுலை திட்டி ஒட்டு கேட்டச்சி, அவங்க அம்மாவை திட்டி ஒட்டு கேட்டச்சி, அவங்க அப்பாவை திட்டி ஒட்டு கேட்டச்சி, அவங்க தாத்தாவை திட்டி ஒட்டு கேட்டச்சி எப்பதான் நீ என்ன செயதேன் என்று சொல்லி ஒட்டு கேடபாய்

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X