லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், பா.ஜ.,வுடன், த.மா.கா.,வை இணைக்கும் பேச்சு, டில்லியில் நடந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில், பத்தாண்டுகள், மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலர், இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி., என, பல பதவிகளை வகித்தவர், வாசன். காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கும், வாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், காங்கிரசை விட்டு விலகிய வாசன், த.மா.கா.,வை மீண்டும் துவக்கினார்.
கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய
இரு கூட்டணியில் இடம் கிடைக்காமல், மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார்; அதில், அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. த.மா.கா., என்ற கட்சியை, வாசனின் தந்தை, கருப்பையா மூப்பனார் துவங்கிய போது, இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.டி.நெடுஞ்செழியன், விஸ்வநாதன், ராணி, கார்வேந்தன், சாருபாலா, மகேஸ்வரி போன்றவர்களில் பலர், வேறு கட்சிகளுக்கு போய் விட்டனர்.
இந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தஞ்சாவூர் தொகுதியில், சுயேச்சை சின்னத்தில், த.மா.கா., போட்டியிட்டுள்ளது.அதில் வெற்றி பெற்றால், மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும், தனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் தரும் கட்சிக்கு ஆதரவு அளிக்கவும், அந்த கட்சியுடன், த.மா.கா.,வை இணைக்கவும், வாசன் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் துவக்கமாக, பா.ஜ., தலைமையுடன், வாசன் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. இரு தினங்களுக்கு முன், அரவக்குறிச்சியில் பிரசாரத்தை முடித்து, டில்லிக்கு சென்ற வாசன், அங்கு, பா.ஜ., முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, த.மா.கா., இளைஞரணி தலைவர், யுவராஜாவிடம் கேட்ட போது, ''திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவே, வாசன், டில்லி சென்றுள்ளார்,'' என்றார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (20)
Reply
Reply
Reply