பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
40 ஆயிரம் பேர் 'பெயில்'
அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்

சென்னை: பிளஸ் 1 பொது தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களை பிளஸ் 2 வகுப்பில் இருந்து வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ் 1,பொது தேர்வு,40 ஆயிரம் பேர்,பெயில்,அரசு, தனியார்,பள்ளி மாணவர்கள்,சிக்கல்


தோல்வி:


பிளஸ் 1 பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2018ல் தேர்ச்சி விகிதம் 91.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2018ல் தேர்வு எழுதிய மாணவர்களில் 73 ஆயிரம் பேர் தேர்ச்சி

பெறவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய எட்டு லட்சம் மாணவ - மாணவியரில் 39 ஆயிரத்து 938 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

குறிப்பாக மெட்ரிக் பள்ளிகளில் தோல்வியுற்ற 1,990 பேர்; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 38; தனியார் சுயநிதி பள்ளிகளில் 344; அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 4,786; சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் உள்ள எட்டு பேர்; அரசு பள்ளிகளில் 29 ஆயிரத்து 391 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.

கோரிக்கை:


இவர்கள் அனைவரும் பிளஸ் 2வில் தொடர்ந்து படிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் விதிகளின் படி பிளஸ் 1 தேர்ச்சி பெறாவிட்டாலும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பை தொடரலாம். இருப்பினும் 2018ல் இது போன்று தோல்வி அடைந்த மாணவர்களில்

Advertisement

30 ஆயிரம் பேர் வரை கட்டாய மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர்.

எனவே இந்தஆண்டு அதுபோன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தேர்வுத் துறையும் பள்ளிக் கல்வித் துறையும் ஆய்வு செய்து மாணவர்களின் தொடர் படிப்புக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-மே-201918:33:33 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>ட்ரிப்பில் ஈ படிச்ச பட்டாதாரி அந்த மாணவர் நெறைய மார்க்ஸ் ம் வாங்கி அரியர்ஸ் இல்லாமலே அரசுக்கல்லூரிலேயே படிச்சு ட்டுவெளியேவந்து 5வருசம் ஆயிட்டது இன்னம் வேலைகிடைக்கலே வறுமையானகுடும்பம் அப்பா இருந்த நிலத்தவிற்று படிக்கவச்சாங்க பிராமின் பாய் நெறைய மார்க்சிவாங்கியும் நோ ஜாப் வேலையில்லாப் பட்டதாரியாக வீட்டுலே குந்திருக்கான் என்னசெய்வது

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-மே-201918:19:05 IST Report Abuse

Natarajan Ramanathanசமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் BE ELECTRICAL ENGG முடித்த ஒரு மாணவன் தனக்கு ஒரு மின்விசிறியை கூட கழட்டி மாட்டத்தெரியாது என்று சொன்னான்.

Rate this:
Pillai Rm - nagapattinam,இந்தியா
09-மே-201911:59:09 IST Report Abuse

Pillai Rmபாஸ் மார்க் வெறும் பயிஞ்சி மார்க் தான் இத வாங்கற மாறி கூட பதினோரு வருஷம் இவனுவோ நடத்தறது இல்ல அடுத்த வருஷம் பாஸ் மார்க்க பத்துன்னு மாத்திகிடுவானுவோ

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X