சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அச்சிடப்பட்ட ரத்தக் குழாய்!

Added : மே 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 அச்சிடப்பட்ட  ரத்தக் குழாய்!

மனித உடல் உறுப்புகளை, செயற்கையாக உருவாக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடக்கிறது. அதே வேளையில், முப்பரிமாண அச்சு இயந்திரங்களில் ஒரு வகையான முப்பரிமாண உயிரி அச்சு இயந்திரங்கள் மூலம் (3டி பயோ பிரின்டிங்) இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை 'அச்சிட்டு' எடுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.இதில் பெரிய சவாலாக இருப்பது, சிக்கலான வலைப் பின்னல் போன்ற நுண்ணிய ரத்தக் குழாய்களை அச்சிடுவதுதான். அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனித நுரையீரலின் எளிய மாதிரியை உயிரி அச்சு இயந்திரம் மூலம் அச்சிட்டு எடுத்தனர். அதில் உள்ள செல்கள் அனைத்தும் துடிப்போடு இயங்கின. அதற்குக் காரணம், அதில் சில எளிய ரத்தக் குழாய்களும் அச்சிடப் பட்டிருந்ததுதான்.'நேச்சர்' இதழில் வெளியான இந்த மைல் கல் முன்னேற்றம், உறுப்பு தானத்திற்காக உலகெங்கும் காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் செய்தி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-மே-201906:11:30 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> குடி புகை ரெண்டுமேதான் முக்கிய சத்ரு மனிதனுக்கு , தெரிஞ்சே செய்யும் கேவலமான தவறு இது மைந்தனின் குடி அண்ட் புகை மனைவியின் வயத்துல இருக்கும் கருவையே நோயாளியாக பிறக்க செய்யும் என்றும் படிச்சுருக்கேன் , ஒரு தோழர் தன 19வயசுக்குள்ள புகைக்கப்பழகினார் இன்று அவர் நுரைஈரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலுடன் அவஸ்தைப்படுகிறார் இது உண்மை 100%குடியால் வயறு வெந்துபோயி செத்தா எவ்ளோ பேருங்க தலைவன் குடிச்சாள் குடும்பமே நிர்கதியாகி தெருவிலே நிக்கும் இவர்களுக்கு நோ மன்னிப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X