சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விண்கல்லில் தண்ணீர்!

Added : மே 09, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 விண்கல்லில் தண்ணீர்!

ஜப்பானிய விண்கலனான, 'ஹயபுசா' 2010ம் ஆண்டில், 'இடோகா' என்ற விண்கல்லின் மாதிரிகளை சேகரித்து, பூமிக்கு அனுப்பியது. அந்த மாதிரிகளை ஆராய்ந்து, விண்கற்களில் ஏதாவது புதிய உலோகங்கள், தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதும், பிரபஞ்சத்தில் கிரகங்கள் உருவான விதம் குறித்து அறிவதும் தான், அந்த ஆய்வின் நோக்கம்.ஆனால், இடோகா விண்கல் மாதிரிகளை ஆராய்ந்த, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அந்த விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.பூமியில் தண்ணீர் இருப்பதற்குக் காரணமே, பல கோடி ஆண்டுகளுக்கு முன், பல மைல் அகல முள்ள விண்கற்கள் தாக்கியதால் தான் என்று சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு. இடோகாவில் இருப்பதாக சொல்லப்படும் தண்ணீர் தடயம், அந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - London,யுனைடெட் கிங்டம்
13-மே-201905:33:41 IST Report Abuse
Perumal திரு பாற்கடல் என்பது வாழ் நட்சத்திரம் அதன் வால் பகுதி தண்ணீர் நிறைந்தது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் இது பூமியில் வால் பகுதி மோதியதால் பூமியில் கடல் உருவானதூ. பிறகு தண்ணீரில் இருந்து காற்று உருவானது . உயிர் உருவானது .
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
09-மே-201912:33:52 IST Report Abuse
M.COM.N.K.K. பலகோடி ஆண்டுகளுக்கு முன் பல விண்கற்கள் நம் பூமியை தாக்கியதாக விஞ்ஞானிகள் சொல்வது உண்மைதான்.தற்போது நம் பூமியில் உள்ள மலைகளே அதற்கு உதாரணமாகும்.விண்கற்கள்தான் பிறகு மலைகளாக மாறி இருக்க வாய்ப்புகள் அதிகம்.மனிதனும் தண்ணீரும் ஓன்று சேர்ந்த விண்கற்கள்தான் நமது பூமியில் விழுந்திருக்கும்.விண்கற்கள் பூமியில் விழுந்தவுடன் அதிலிருந்த தண்ணீர்தான் பிறகு கடலாக மாறியும் இருக்கலாம் இதன் பிறகுதான் மனிதஇனம் தோன்றி இருக்கலாம்.இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் மனிதனின் பூர்விகம் நமது புவி இல்லை என்றே நாம் கருதலாம் .விண்கற்கள் எங்கிருந்து வந்ததோ அந்த இடம்தான் மனித இனத்தின் பூர்வீகமாக இருக்கலாம் எதிர் காலத்தில் கண்டிப்பாக இதற்கு விடை கிடைத்துவிடும் நம்பலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X