சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அழியும் 10 லட்சம் உயிரினங்கள்

Added : மே 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 அழியும் 10 லட்சம் உயிரினங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பில், 132 நாடுகளின் அரசுகள் அங்கீகரித்துள்ள ஒரு பல்லுயிர் ஆய்வறிக்கை, அண்மையில் பாரீசில் வெளியானது. அதன்படி, உலக உயிரினங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவை அழியும் பேரபாயத்தில் உள்ளன. பல நாட்டு அரசுகள், சூழலியல் அமைப்புகள் நடத்திய, 15 ஆயிரம் ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்து உருவானது இந்த எச்சரிக்கை.காடுகளை அழித்து விளை நிலமாக்குவது, பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் போடுவது, கடலில் போக்குவரத்து மற்றும் மீன் பிடிப்பு அதிகரிப்பது, புவி வெப்பமாதல் போன்ற பல மனித நடவடிக்கைகளை காரணங்களாக, இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சூழியல் பாதுகாப்பு, காட்டுயிர், கடலுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால், பூமியின் பல்லுயிர்த் தன்மை அம்போ தான்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-மே-201912:41:17 IST Report Abuse
Nallavan Nallavan இதைப்பத்தி யாருக்கும் கவலை இல்ல ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X