மழையே வருக....

Added : மே 09, 2019
Advertisement
 மழையே வருக....




நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை

கூறுசேர்வதொர் கோலமாய்ப்

பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை

ஆறுசேர்சடை அண்ணலே.




மழை வேண்டி பாடப்பட வேண்டிய மேற்கண்ட திருப்பராய்த்துறை பதிகத்தை மேக ராகக் குறிஞ்சி ராகத்தில் சென்னை வடபழநி ஒதுவார்கள் ஒங்கிய குரலில் மனமுருக பாடுகின்றனர்.

சுற்றிலும் இருக்கும் பக்தர்கள் எல்லாம் மனமுருக மழை வேண்டி பிரார்த்திக்கின்றனர்.

மாநிலம் முழுக்க பருவமழை பெய்யவும், கோடைக்கு பிறகு, வசந்தம் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடந்துவருகிறது அந்த நிகழ்வின் ஒரு கட்டமாக சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் தக்கார் ஆதிமூலம் முன்னிலையில் மழை வேண்டி நடந்த யாகத்தில்தான் மேற்கண்ட பாடல்கள் பாடப்பட்டன.

நீர் நிரம்பிய புனித கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கோவில் சிவாச்சாரியார்கள், பர்ஜன்ய சாந்தி வருணஜப வேள்வி நடத்தினர்.வாத்தியங்கள் முழங்க அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்தபைரவி ராகங்கள் இசைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஓதுவாமூர்த்திகள், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற மழைப்பதிகங்களை பாராயணம் செய்தனர்.

கோவில் சிவாச்சாரியார்கள் கலசங்களை ஊர்வலமாக கோவில் தெப்பக்குளத்திற்கு கொண்டு சென்று ஊற்றி வழிபாடு செய்தனர் பின்னர் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் கலச நீர் ஊற்றி ஊற்று பெருக்கெடுக்க வேண்டிக் கொண்டனர்.

நிறைவாக மகா கலசத்து நீரால் வடபழநி ஆண்டவரான முருகன் அபிேஷகம் செய்யப்பட்டார், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X