சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 09, 2019
Share
Advertisement
கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு: தி.மு.க.,வில் இணைய, தங்க தமிழ்ச்செல்வன் ஆயத்தமாகி வருகிறார்.டவுட் தனபாலு: பன்னீர்செல்வம், பா.ஜ.,வில் இணையப் போகிறார்னு, சொன்னதற்கு பதிலடியா இது... அது கிடக்கட்டும்... தமிழ்ச்செல்வனின் அந்த விமர்சனத்துக்கு, பன்னீரின் தர்மயுத்த தளபதி, கே.பி.முனுசாமி தான் கொந்தளித்தாரு... ஆனால், அ.தி.மு.க.,வின் இணை ஒருங்கிணைப்பாளரான, இ.பி.எஸ்., எந்த பதிலடியும் தராமல்
 'டவுட்' தனபாலு

கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு: தி.மு.க.,வில் இணைய, தங்க தமிழ்ச்செல்வன் ஆயத்தமாகி வருகிறார்.

டவுட் தனபாலு: பன்னீர்செல்வம், பா.ஜ.,வில் இணையப் போகிறார்னு, சொன்னதற்கு பதிலடியா இது... அது கிடக்கட்டும்... தமிழ்ச்செல்வனின் அந்த விமர்சனத்துக்கு, பன்னீரின் தர்மயுத்த தளபதி, கே.பி.முனுசாமி தான் கொந்தளித்தாரு... ஆனால், அ.தி.மு.க.,வின் இணை ஒருங்கிணைப்பாளரான, இ.பி.எஸ்., எந்த பதிலடியும் தராமல் இருக்காரே... இது என்ன விஷயம்கற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

***

மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: தி.மு.க., - அ.ம.மு.க., இரண்டு கட்சிகளும், 'ஏ மற்றும் பி டீம்' ஆக செயல்படுகின்றன. அவர்களால் முடியாததை இவர்களும், இவர்களால் முடியாததை அவர்களும் செய்து வருகின்றனர்.

டவுட் தனபாலு: 'அம்மா இல்லாத நிலையில், மோடி தான் எங்கள் டாடி... மோடி சொல்லித் தான், இ.பி.எஸ்., அணியில் இணைந்தேன்'னு, தமிழக அமைச்சர்கள் வெளிப்படையாகப் பேசுவதைப் பார்த்தால், அ.தி.மு.க., - பா.ஜ., இரண்டுமே, ஒரே கட்சி தானோ என்ற, 'டவுட்' எழுந்திருக்கு... இந்த நிலையில், அடுத்த கட்சிகளை விமர்சிப்பது சரியா...!

***

அ.ம.மு.க, கொள்கை பரப்பு செயலர் தங்க தமிழ்ச்செல்வன்: ஆட்சியை கலைப்பதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும், இயல்பாக கை கோர்ப்பது நிதர்சனமான உண்மை; அதற்கு கூட்டணி என்ற பெயர் இல்லை.

டவுட் தனபாலு: 'ஒருவரை ஒருவர், பார்த்துக் கொண்டனர்; சிரித்துக் கொண்டனர்'னு, உப்புச் சப்பில்லாத காரணத்தை எல்லாம் பூதாகரப்படுத்தி, பன்னீர் செல்வத்திடம் இருந்து, முதல்வர் பதவியை பறித்த நீங்க, தி.மு.க.,வோடு கை கோர்ப்பதை மட்டும் எப்படி, இயல்பாக எடுத்துக்க முடியும்கறது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X