பதிவு செய்த நாள் :
'நீங்கள் அறைந்தால் எனக்கு ஆசிர்வாதம்'
மம்தாவுக்கு பிரதமர் மோடி பதில்

பங்குரா: ''மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, என்னை அறைய விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவரை நான் எப்போதும் சகோதரியாகவே கருதி மதிக்கிறேன். அவர் அறைந்தால், அது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக ஏற்று கொள்வேன்,'' என, பிரதமர் மோடி கூறினார்.

மம்தா,பிரதமர்,மோடி,பதில்,அறைந்தால்,ஆசிர்வாதம்


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பங்குரா மாவட்டத்தில், நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

என்னை அறைய விரும்புவதாக, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவரை எப்போதும் என் சகோதரியாகவே கருதி மதிக்கிறேன். அதனால், அவர் அடித்தால், அது எனக்கு கிடைக்கும் ஆசிர்வாதமாகவே ஏற்று கொள்வேன். ஆனால், நிதி நிறுவன மோசடி மூலம், ஏழைகளின் வயிற்றில் அடித்த, தன் சகாக்களை அறைய, அவருக்கு தைரியம் உள்ளதா என, மம்தாவை கேட்க விரும்புகிறேன்.

விரக்தி:


முதல்வர் மம்தா, மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். மக்களை

ஏமாற்றிவிட்டார். என்னை விமர்சிக்க, மம்தா பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்து, அவருக்கு விரக்தி ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. முதல்வர் பதவியில் மட்டுமே, அவரின் கவனம் உள்ளது. மாநிலத்தை, 'போனி' புயல் தாக்கிய போது, அவருடன் பேச, தொடர்ந்து முயற்சித்தேன். ஆனால், பிரதமருடன் பேசுவது சரியாக இருக்கும் என, அவர் நினைக்கவில்லை.

இங்குள்ள அதிகாரிகளுடன் பேசி, மாநிலத்திற்கு உதவ, மத்திய அரசு விரும்பியது. ஆனால், இதனை ஏற்க மறுத்த மம்தா, அதற்கான கூட்டத்தை கூட்டவும் மறுத்துவிட்டார். என்னை பிரதமராக ஏற்க மாட்டேன் என, மம்தா வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் பிரதமரை ஏற்க, அவர் தயாராக உள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியில், மம்தாவுக்கு அக்கறையில்லை. தன் குடும்பம், மற்றும் கட்சியின் குண்டர்கள் மீது தான், அவருக்கு அக்கறை. குண்டர்கள் அரசு நடப்பதால், மேற்கு வங்க மக்கள், மம்தா மீது கோபமாக உள்ளனர்.

கொள்ளை:


ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் கிடைப்பதற்காக, மத்திய அரசு, மாநிலத்துக்கு நிதி அனுப்புகிறது. ஆனால் அந்த நிதியை, திரிணமுல் காங்., கட்சியினர் கொள்ளைஅடிக்கின்றனர். ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்து, என் மீது புழுதி வாரி துாற்றுகின்றன. வரும், 23ம் தேதி, மம்தாவுக்கு மறக்க முடியாத நாளாக அமையும். அந்த நாள், மேற்கு வங்கத்தில், திரிணமுல் அரசின் சரிவுக்கு துவக்கமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement

அறைவேன் எனக் கூறவில்லை:

''பிரதமர் மோடியை அறைவேன் என, நான் கூறவில்லை,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இங்கே, புருலியா மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: பிரதமர் மோடியை அறைவேன் என, நான் கூறவில்லை. திரிணமுல் மீது, அபாண்டமாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பிரதமர் மோடியை, ஜனநாயக முறைப்படி அறைய வேண்டும் என்று தான் கூறினேன். ஓட்டுகள் மூலம், மக்கள் தங்கள் முடிவை தெரிவிப்பார்கள் என்பதை தான், ஜனநாயக முறைப்படி அறைய வேண்டும் என, கூறினேன். நான் ஏன், பிரதமரை அறைய வேண்டும். அப்படிப்பட்ட பெண் அல்ல நான். சொல்லும் மொழியை புரிந்து கொண்டு, பதில் சொல்ல வேண்டும். 'நிலக்கரி சுரங்கங்களில், திரிணமுல் கட்சியின், 'மாபியா' கூட்டம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது; இதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் முழுமையாக கிடைப்பதில்லை' என, மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை அவர் நிரூபித்துவிட்டால், மேற்கு வங்கத்தில், 42 தொகுதிகளிலும், திரிணமுல் வேட்பாளர்கள், போட்டியிலிருந்து விலகி விடுவார்கள். நிரூபிக்காவிட்டால், மோடி, 100 தோப்புக்கரணம் போட வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-மே-201913:57:37 IST Report Abuse

Malick Raja

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201923:07:18 IST Report Abuse

Pugazh Vபிரதமர் பதவி மட்டும் குடுத்துடுங்க..அப்புறம் எதால வேணா அடிங்க..அதெல்லாம் ஆசிர்வாதம் னு நெனச்சுக்கறேன். பதவி..அதைமட்டும் மறந்துராதீங்க..வாங்க வரிசைல வந்து அறைங்க அல்லது மிதிங்க..

Rate this:
10-மே-201920:14:07 IST Report Abuse

ஆப்புயார் வேணுமானாலும் என்னை அறையுங்கள்...ஆனா அடுத்த பிரதமரா நானாகவே இருக்கணும். ஆனா மக்கள் வாக்குகள் மூலமா அறைஞ்சா நடக்காதே....

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X