பதிவு செய்த நாள் :
இரட்டை குடியுரிமை விவகாரம்
தடை கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி: இரட்டை குடியுரிமை விவகாரத்தில், லோக்சபா தேர்தலில் போட்டியிட, ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என, கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காங்., ராகுல்,இந்தியரா,சுப்ரீம் கோர்ட்,அதிரடி


'காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் குடியுரிமையை பெற்றுள்ளார்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியை சேர்ந்த, ஜெய் பகவான் கோயல் மற்றும் சந்திர பிரகாஷ் தியாகி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.

அதன் விபரம்: ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த நிறுவனமொன்றில், ராகுல் பங்குதாரராக உள்ளார். அந்த நிறுவனத்தின், 2005 - 06 ஆண்டறிக்கையில், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என, குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இரட்டை குடியுரிமை பெற்ற ராகுலை, லோக்சபா தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது, 'ஏதோ ஒரு நிறுவனத்தின் ஒரு அறிக்கையில், ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனக் கூறி இருந்தால், அவர் அந்நாட்டு குடிமகன் ஆகிவிடுவாரா? 'ஒருவேளை, அவரே பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என, 123 கோடி இந்தியர்களும் கூறினால், உங்கள் நிலை என்ன?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeeva - chennai,இந்தியா
19-மே-201913:01:07 IST Report Abuse

jeevaஇவர் ஜட்ஜா... இல்லை nila உடமை சமுதாய ஆண்டையா? அதெப்படி இந்திய மக்கள் இத்தாலி புத்திரனை ஒட்டு மொத்தமாக பிரதமர் ஆஹா வேண்டும் என்பார்கள்? இந்தியனுக்கு சுய புத்தி இல்லையா? சோனியா இந்தியன் இல்லை என்று எங்களுக்கு தெரியாதா?

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-மே-201902:50:54 IST Report Abuse

Cheran Perumalசுப்ரிம் கோர்ட் எப்போது கட்டப்பஞ்சாயத்து ஆனது. 123 கோடி மக்களும் இவர்களால் ஆயுள் அல்லது மரண தண்டனை பெற்ற ஒரு கைதி பிரதமராக வேண்டும் என்று தீர்மானித்தால் கோர்ட்டின் நிலை என்னவாக இருக்கும்? நீதியை சிதைக்கும் நீதிபதிகள் தான் இந்த நாட்டின் தலையெழுத்தா?

Rate this:
G.Krishnan - chennai,இந்தியா
15-மே-201917:48:40 IST Report Abuse

G.Krishnanவேறு நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள். . . . . இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இந்திய நாட்டில் உயர் பதவிகளை வகிக்க தடை சட்டம் கொண்டுவரப்டவேண்டும் . . . . . . .அது தேவை இல்லையெனில், பிரிட்டிஷ் அரசாங்கமே இருந்திருக்கலாமே, சுதந்திரம் அடைந்து என்ன பிரயோஜனம் . . . . . .இந்திய நாட்டில் இந்தியர்கள் மட்டுமே ஆளவேண்டும், 123 கோடி மக்கள் தேர்ந்தெடுத்தாலும் நூறு சதவிகிதம் அவர் இந்தியராக இருக்கவேண்டும். . . . .ஒருவர் இந்திய குடிமகனாக இல்லை என்றால், அவருக்கு இந்த நாட்டின் மீது ஒரு பற்றுதல் எப்படிஇருக்கும்? . . . . ., இந்த நாட்டுக்கு அவர் எப்படி நல்லது செய்வார்? . . . . . .சுரண்ட வேண்டியதை நன்றாக சுரண்டி விட்டு, இந்தியர்களின் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு. . . . . . வேறு நாட்டில் குடிமகனாக இருப்பதால் அங்கு போய், ஒளிந்து கொள்வார்.. . .இப்படிப்பட்ட கேடுகெட்ட ஜனநாயகம் என்ற பெயரில் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது.. . . . . புரிந்து கொள்ளமுடியாத /.ஊழல் மலிந்த நீதி மன்றங்கள் / அரசியல்வாதிகள், மக்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதால்தான் இந்தமாதிரியான நிகழ்வுகள் நடக்கிறது . . . . .இதற்க்கு எப்ப விடிவு காலம் வருமோ?

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X