பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பெரியகுளத்தில் கேலிக்கூத்தாக்கப்பட்ட ஜனநாயகம்;
17 ஓட்டுக்களை 'நோட்டா'வுக்கு போட்ட அலுவலர்

தேனி: ஓட்டுச்சாவடி அலுவலரே 17 ஓட்டுக்களை 'நோட்டா' விற்கு போட்டதால் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பெரியகுளம்,கேலிக்கூத்து,ஜனநாயகம்,17 ஓட்டு,நோட்டா,அலுவலர்


தேனி லோக்சபா, பெரியகுளம் சட்டசபை (தனி) தொகுதி வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் 197 வது ஓட்டுச்சாவடி உள்ளது. இங்கு 702 ஆண்கள், 703 பெண்கள் என 1, 405 வாக்காளர்கள் உள்ளனர். ஏப். 18 ல் மாதிரி ஓட்டுகளை அழிக்காமல் அதனுடன் சேர்த்து ஓட்டுப்பதிவு தொடர்ந்ததால் மறு ஓட்டுப்பதிவு நடத்துவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார். ஆனால் இந்த ஓட்டுச்சாவடியில் தேர்தல் அலுவலரே 17 ஓட்டுக்களை 'நோட்டா' விற்கு போட்ட

விபரம் வெளியானதால் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நடந்தது என்ன:


இங்கு ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் 63 ஓட்டுக்கள் பதிவானது. திடீரென இயந்திரம் பழுதால் ஓட்டுப்பதிவு தடைபட்டது. சீரமைக்க மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் 2 மணிநேரத்திற்கு பின் புதிய இயந்திரம் கொண்டுவரப்டட்டது. ஆனால் ஏற்கனவே பதிவான 63 ஓட்டுக்களை எவ்வாறு கணக்கிடுவது என்ற பிரச்னை எழுந்தது. ஓட்டளித்தவர்களை வரவழைத்து மீண்டும் ஓட்டளிக்க வைப்பது என்ற ஒருமித்த கருத்துக்கு ஏஜென்ட்டுகள் சம்மதித்தனர். வீடு திரும்பியவர்களை கட்சியினர் தேடி, தேடி சென்று 46 பேரை ஓட்டளிக்க வைத்தனர்.

இதில் 17 பேரை மீண்டும் அழைத்து வர முடியவில்லை. பதிவு செய்த 63 ஓட்டுகளுடன் மாலை வரை 904 ஓட்டுகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடியும் வரை அந்த 17 பேரும் வராததால் அதிகாரிகள் எவ்வாறு கணக்கை நேர் செய்வது என தவித்தனர்.

Advertisement

பூத் ஏஜென்ட்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 17 ஓட்டுக்களை முக்கிய கட்சிகளுக்கு பகிர்ந்து கொள்ள ஏஜென்டுகளை கேட்டனர். இதனை அவர்கள் மறுத்தனர்.

எந்த கட்சிக்கும் ஓட்டுகள் வேண்டாம் 17 ஓட்டுக்களை பதிவு செய்தால்தான் கணக்கை முடிக்க இயலும் என கூறி பெண் ஓட்டுச்சாவடி அலுவலர் ஏஜென்ட்டுகள் சம்மதத்துடன் 17 ஓட்டுக்களையும் 'நோட்டா'விற்கு போட்டுள்ளார். தேர்தல் முடிந்து ஓரிரு நாட்களுக்கு பின் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மறு ஓட்டுப்பதிவிற்கு பரிந்துரை செய்துள்ளது தெரிய வந்தது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201923:19:18 IST Report Abuse

Pugazh Vதேர்தல் முடிந்து விட்டது எனவே ஆரூராங் மீண்டும் தமிழகத்தை டுமீல் நாடு என்று அவமதிக்க ஆரம்பித்து விட்டார். மானங்கெட்ட புத்திகெட்டஸசில தமிழர்கள் இதையும் படித்து விட்டு சொரணையே இல்லாமல் இருக்கும்

Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மே-201922:43:10 IST Report Abuse

தமிழவேல் இதுபோன்ற நிலையில் எப்படி நடந்துகொள்வது என்று ஒரு வரைமுறையை நிர்ணயிக்காத நிலையில், எப்படி இங்கு சிலர் இதை உலகத்தர ஓட்டு முறை என்று குறை முடிகின்றது ?

Rate this:
10-மே-201921:23:54 IST Report Abuse

ஆப்புகுத்துங்க எஜமானி அம்மா...குத்துங்க...நம்ம கெவிர்மெண்ட் மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லேங்கறத 17 முறை குத்தி சொல்லிட்டீங்க போங்க...

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X