கொடைக்கானல்:சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு இடையே, ஓய்வெடுக்க கொடைக்கானல் வந்த, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், மனைவியுடன் படகு சவாரி செய்தார். மதுரை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு, கொடைக்கானல் வந்தார். காலையில், கோல்ப் மைதானத்தில் நடைபயிற்சி செய்தார்.தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு,கொடைக்கானல் ஏரியில், ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் பழநி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், அவரது மனைவி ஆகியோர் படகு சவாரி செய்தனர்.