ஜெய் ஸ்ரீராமுக்கு போட்டி ஜெய் காளி

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (54)
Advertisement

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் கோஷமான ஜெய் ஸ்ரீராமுக்கு பதிலாக ஜெய் மாகாளி என்ற கோஷத்தை திரிணாமுல் காங்., முன்னெடுத்துள்ளது.






தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மம்தா கூறுகையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடலாம். ஆனால் நாங்கள் ஜெய் பெங்கால், ஜெய் மாகாளி என்றே சொல்லுவோம். பா.ஜ.,வின் முழக்கங்கள் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.






சவாலும் இல்லை


இந்து - முஸ்லிமை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். எல்லா மதமும் எங்கள் மதம். ஒவ்வொருவரின் சாதியும் எங்கள் சாதி. பா.ஜ., ஏன் இது போன்ற அரசியலை செய்வதில்லை என மோடியிடம் போய் கேளுங்கள். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடியிடம் இருந்தோ, பா.ஜ., இடம் இருந்தோ எங்கள் கட்சிக்கு எந்த சவாலும் இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசுவோம். 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்.





எனக்கும் மோடிக்கும் இடையேயான தனிப்பட்ட தாக்குதல்களை துவக்கியதே மோடி தான். என்னை அவர் ஸ்பீட் பிரேக்கர் சகோதரி என்கிறார். நான் அவரை சொல்கிறேன், காலாவதியான தலைவர். நான் ஜனநாயகம் பற்றி பேசுகிறேன். ஆனால் அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
10-மே-201923:33:07 IST Report Abuse
KumariKrishnan Bjp ஓம் காளி, ஜிய் காளி, ஜெய் மாகாளி, ஜெய் ஸ்ரீராம் என எல்லா கோஷங்களும் எங்களுடையதுதான் நீங்கள் அதில் ஒன்றையோ இரண்டையோ எடுத்துக்கொள்ளுங்கள் சந்தோசம்தான் ஆனால் வந்தேறிகளான பங்களாதேஸ் முஸ்லீம்களுக்காக கோஷம்போடும் வேலையை நிறுத்தினால்போதும் அதுசரி, எல்லாமதமும் உங்கள் மதம் என்று சொல்கிறீர்கள் சரி நீங்கள் என்னமதம்? இந்துவா? முஸ்லீமா? கிருஸ்டீனா? சீக்கா? புத்தமா? அதை சொல்லலியே
Rate this:
Share this comment
Cancel
10-மே-201922:11:21 IST Report Abuse
ஆப்பு ஒருத்தர் ராமரை வெச்சு ஜல்லியடிச்சா இன்னொருத்தர் காளியை வெச்சு ஜல்லி.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
10-மே-201920:52:45 IST Report Abuse
oce நீயே காலாவதியான பெண்மணி. நீ போய் இன்னொருவரை...........................................................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X