பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பகவான் மீது புகார்

Added : மே 10, 2019 | கருத்துகள் (9)
Advertisement

திருவள்ளூர் : திருத்தணியை அடுத்த வெள்ளியகரம் என்ற இடத்தில் பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக புகாரின் பேரில் ஆசிரியர் பகவானை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜப்பேட்டையைச் சேர்ந்தவர் பகவான். இவர் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளியகரத்தில் பணியாற்றியபோது பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது இவரை அந்த பள்ளியில் இருந்து பணியிடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். இதனால் ஆசிரியர் பகவான் தமிழக அளவில் பிரபலம் ஆனார். சமூக வலைத்தளங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டார்.


ஆனால், ஆசிரியர் பகவான், வெள்ளியகரம் ஊரைச்சேர்ந்த நாதமுனி என்பவர் மகளை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் ஆசிரியர் பகவானை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஆசிரியர் பகவான் மீதான புகாரால், பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
16-மே-201905:56:28 IST Report Abuse
 nicolethomson யார் சொல்வது சரியென்று தயவு செய்து தீர விசாரித்து எழுதுங்க ஏனென்றால் இவரால் பல மாணவர்கள் பலன் அடைவார்கள் , இவர் முடங்கி போயி விடக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
15-மே-201912:58:09 IST Report Abuse
Pillai Rm இப்புடி பள்ளிக்கூடத்துல வாத்தியாரு செல்பி எடுக்கலாமா
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-மே-201912:27:21 IST Report Abuse
Nallavan Nallavan திருமணம் செய்ய வாக்குறுதி ?? அந்த அக்ரிமெண்ட்டுக்கு சட்டத்துல இடமிருக்கா ? சட்டப்படி செல்லுமா ?? மேட்டரை முடிச்சுட்டு திருமணத்துக்கு மறுத்தாத்தான் தப்பு ...... வாக்குறுதி, போக்குறுதி -ன்னு பேசிக்கிட்டு ..... போங்கடாங் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X