காங்கிரசின் கொடூர முகம்: மோடி தாக்கு| Dinamalar

காங்கிரசின் கொடூர முகம்: மோடி தாக்கு

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (40)
Share
ரோதக்: அரியானா மாநிலம் ரோதக்கில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் சீக்கியர்களை கொன்றதை நியாயப்படுத்தவதன் மூலம் காங்கிரசின் கொடூர முகம் வெளியே தெரிகிறது என பிரதமர் மோடி இன்றைய பிரசாரத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசியதாவது; காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கான கட்சி ஆகும். ஒரு குடும்பத்தை காப்பாற்றவே இந்த கட்சி பாடுபடுகிறது. 1984ல்

ரோதக்: அரியானா மாநிலம் ரோதக்கில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் சீக்கியர்களை கொன்றதை நியாயப்படுத்தவதன் மூலம் காங்கிரசின் கொடூர முகம் வெளியே தெரிகிறது என பிரதமர் மோடி இன்றைய பிரசாரத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.



latest tamil news



அவர் மேலும் பேசியதாவது; காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கான கட்சி ஆகும். ஒரு குடும்பத்தை காப்பாற்றவே இந்த கட்சி பாடுபடுகிறது. 1984ல் சீக்கியர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது காங்கிரஸ்.. அரியானா, மத்திய பிரதேசம், இமாச்சல், உ.பி.,யில் ஏறக்குறைய 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ராகுலின் குரு சொல்கிறார் நடந்தது, நடந்ததாக இருக்கட்டும் என்கிறார்.


latest tamil news




நாட்டு நலனில் அக்கறை


மக்களின் உயிர் காங்கிரசுக்கு சாதாரணமாக போய் விட்டது. இதில் இருந்தே காங்கிரசின் உண்மையான கொடூர முகம் வெளியே வர துவங்கியுள்ளது. பா.ஜ., நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. ராணுவ வீரர்கள் குறித்து காங்., கிற்கு அக்கறை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X