மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: மாயாவதி

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (32)
Advertisement

லக்னோ : மோடியின் பிரதமர் கனவு மீண்டும் பலிக்காது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.






மாயாவதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்களின் கூட்டணி சாதி அடிப்படையிலானது என கூறுவது நகைப்புக்குரிய, முதிர்ச்சியற்ற பேச்சு மட்டுமே. மோடி பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் பிறக்கவில்லை. அதனால் அவருக்கு சாதியவாதத்தால் ஏற்படும் வலியை அவர் எதிர்கொண்டிருக்க மாட்டார். இதற்காக எங்கள் கூட்டணியை ஒதுக்க வேண்டும் என கூறுவது சரியல்ல. மோடி தன்னை பிற்படுத்தப்பட்டவர் என கூறிக் கொள்கிறார். அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால், ஆர்எஸ்எஸ் அவரை பிரதமராக அனுமதிக்காது.





மோடி குஜராத்தை பார்க்கவில்லை. எனக்கு தெரிந்து குஜராத்தில் தலித்கள் யாரும் கவுரவமான வாழ்க்கை வாழ முடியாது. தலித்கள் திருமணத்தின் போது குதிரை சவாரி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. குஜராத்தில் தலித்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கின்றன.





தேர்தலில் பா.ஜ., நிச்சயம் தோற்கும் என்பதையும், அக்கட்சி விரக்தியில் உள்ளது என்பதையுமே அக்கட்சியினரின் பேச்சுக்கள் காட்டுகின்றன. பா.ஜ., நினைப்பது போல் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. மீண்டும் பிரதமராவோம் என்ற மோடியின் கனவும் நிறைவேறாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
11-மே-201910:24:32 IST Report Abuse
Amreen மோடியை ஏன் திருடர்களுக்கும் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கவில்லை? ஒன்று - இந்தியாவில் கள்ள கடத்தல் ஹவாலா சட்ட விரோத செயல்களை ஒரு சமூகம் 70 ஆண்டுகளாக செய்து வருகிறது?. மோடி இவைகளை சட்ட மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தடுத்துவிட்டார் இரண்டு - இன்னொரு சமூகம் படிக்காத மற்றும் பாமர மக்களை மதமாற்றம் செய்து வருகிறது. அதற்கு ஆளும் கட்சிகளும் உடந்தை. NGOகள் என்ற பெயரில் மதமாற்றம் செய்து மற்றும் சில ஆயிரம் கோடிகளை ஆட்டையை போடும் இந்த சமூகத்தை சில நடவடிக்கைகள் மூலம் அந்நிய நாட்டு பணம் உள்ளே வராமல் தடுத்துவிட்டார் மூன்று - மாநில அளவில் அரசியல்வாதிகளின் பினாமி சொத்துக்கள் பல லக்ஷம் கோடிகளை தாண்டும். மோடியின் பினாமி சொத்துகள் சட்டம் இவர்களது பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டுகிறது நான்கு - பண மதிப்பிழப்பு மூலம் ஹவாலாக்கள் மற்றும் சட்ட விரோத தொழில் செய்வோரின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது கள்ள பணம் வீட்டில் பதுக்கி வைத்துள்ளவர்களில் நிலைமை கேள்வி குறியாகி உள்ளது. ஐந்து - உங்களது பண நடவடிக்கைகளை IT வங்கிகளின் மூலம் ட்ராக் செய்கிறது. வரி ஏமாற்றுவோர் வயிறில் புளியை கரைக்கிறது ஆறு- GST இந்தியா முழுவதும் ஒரே சந்தையாக அங்கீகரிக்கிறது. இதுவரை வரி ஏமாற்றிய வியாபாரிகள் இனிமேல் ஏமாற்ற முடியவில்லை. ஏழு - சட்ட விரோத நிறுவனங்களின் இயக்குனர்கள் 3 லக்ஷம் பேர் வீட்டுக்கு அனுப்ப பட்டுள்ளனர். அவர்கள் இனிமேல் பதவி ஏற்க முடியாது எட்டு - நிறுவன தொழில் கலைப்பு சட்டங்கள் மூலம் 3 லக்ஷம் கோடிகளுக்கு மேல் வங்கிகளுக்கு பணம் திரும்ப வந்துள்ளது இதுவரை வங்கி கடனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஒன்பது - இலவசங்கள் மூலம் ஏமாற்றிய மற்ற அரசுகளை போல் இல்லாமல் நாட்டின் நீண்ட கால திட்டங்களுக்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது வெகு ஜன பாமர மக்களுக்கு பிடிக்கவில்லை. 15 லக்ஷம் இலவசம் என்று சொல்லாத பொய்யய் நம்பி கண் மூடி பால் குடிக்கும் பூனை குட்டிகளாகவே வெகு ஜனம் உள்ளது.. பத்து - நாட்டின் பரம்பரை ஆட்சி கூட்டங்களுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது. 130 கோடி மக்களில் ஆண்ட குடும்பத்தை தவிர மற்றவர்களுக்கு ஆட்சி செய்ய அருகதை இல்லையா?? இது தமிழ் நாட்டுக்கும் இந்தியாவிக்கும் பொருந்தும். இதில் ஆண்ட குடும்பத்தின் புறங்கையை நக்கிய அல்ல கைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே எல்லாரும் பாடலாம் - மோடி ஒயிக, மோடி ஒயிக, மோடி ஒயிக என்னும் நாமம்??????? அவன் நாமம் வாழ்க, அயோக்கிய பய நாமம் வாழ்க மோடி ஒயிக
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201908:34:03 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆ உம் என்றால் இந்த அரசியல்வாதிகள் ஜாதியை ஏலம் போடுகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201908:32:50 IST Report Abuse
Srinivasan Kannaiya நம்ம கீழ்பாக்கம் என்ற ஊரில் இந்த அம்மாவுக்கு நல்ல வைத்தியம் பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X